கெட்ட சகுனம் என்றால் என்ன, கெட்ட விஷயங்கள் நடக்க உள்ளது என்பதை உணர்த்தக்கூடிய விஷயங்கள் என்ன?, நம் முன்னோர்கள் கெட்ட சகுனம் என உணர்த்திய சில அறிகுறிகள் என்ன என பார்ப்போம்.
நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல நாட்கள் நமக்கு சாதகமாக இருந்தாலும், சில நாட்கள் நமக்கு சாதகமாக அமையாமலும், கெட்ட விஷயங்கள் நடப்பதாக இருக்கும். இப்படி கெட்ட விஷயம் நடக்கப் போவதை முன்கூட்டியே கெட்ட சகுனமாக உணர்த்தக்கூடிய சிலவிஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
முன்னோர்கள் அறிவுறுத்திய சில கெட்ட சகுனம்:
தண்ணீர் குடித்து செல்லுதல் :
பொதுவாக நாம் வேலைக்கு அல்லது ஏதேனும் விஷயம் தொடர்பாக வீட்டை விட்டு கிளம்பும் போது கால் தடுக்குதல், எங்கேனும் இடித்துக் கொள்ளுதல் போன்ற விஷயங்கள் கெட்ட சகுனமாகவும், அப்படி நடக்கும் போது, மீண்டும் வீட்டிற்குள் சென்று சிறிது தண்ணீர் குடித்து விட்டு கிளம்புவோம். ஏனெனில் நம் அலட்சியமான மனநிலை மாற்றவும், நிதானத்தைக் கொண்டு வர வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், தண்ணீர் குடித்து விட்டு கிளம்ப சொல்வார்கள்.
இதே போல சில விஷயங்கள் நமக்கு கெட்ட சகுனமாக அமைகிறது. அப்போது நமக்கு கெட்ட நேரமாக அமைய வாய்ப்புள்ளது. அந்த நேரங்களில் நாம் கூடுதல் கட்டுப்பாடும், கவனமாகவும் இருப்பது அவசியம். மேலும் சில அறிகுறிகள் என்ன என பார்ப்போம்.
துளசி செடியை உலர்த்துதல் :
உங்கள் வீட்டில் துளசி செடி வளர்க்கிறீர்கள் என்றால், அது திடீரென காய்ந்து போக ஆரம்பித்தால், உங்களுக்கு ஏதேனும் கெட்ட காலம் தொடங்கப் போகிறது என்பதை அது உணர்த்தக்கூடியதாக இருக்கும். துளசியை உலர ஆரம்பித்ததும் நீங்கள் சில நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், அதன் அறிகுறிகளும் தெரிய ஆரம்பிக்கும்.
தங்க நகை இழப்பு :
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்கம் மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தங்க நகை ஏதேனும் தொலைந்தால் அது வீட்டிற்கு எதிர்மறையான விஷ்யாங்கள் வர ஆரம்பிக்கும் என்பதை உணர்த்தக்கூடியது.
தங்கம் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகவும், அது மக்களின் முதலீடு, வாழ்க்கையை இக்கட்டான நேரத்திலிருந்து காக்கக்கூடிய பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தங்கம் தொலைந்து விட்டால், உடனே வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்வதும், அருகில் உள்ள அனுமனை வழிபாடு செய்வதும் நல்லது.
நெய் கொட்டுதல் :
உங்கள் கையில் வைத்திருக்கக்கூடிய நெய் பாத்திரம் தவறி தரையில் விழுவதும், நெய் தரையில் பரவுவது உங்களுக்கு கெட்ட விஷயங்களை தரக்கூடியதாக இருக்கும்.
பல்லி சண்டை :
ஜோதிட சாஸ்திரப்படி பல்லி சத்தமிடுவது நல்ல சகுனம் அல்லது நாம் நினைப்பது சரியென உணர்த்துவதாக இருந்தாலும், வீட்டில் பல்லி சண்டை போட்டால் அது அசுபமான விஷயமாக கருதப்படுகிறது. இதுவும் கெட்ட காலம் வருவதற்கான அறிகுறியே.
ஆரத்தி விளக்கு அணைவது :
வீட்டில் பூஜை செய்யும் போது ஆரத்தி காட்டுவது வழக்கம். இது வீட்டில் அனைத்து அறையிலும் காட்டுவதால் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் ஆரத்தி காட்ட தீபத்தை ஏற்றுவோம். ஆனால் அது மீண்டும் மீண்டும் அணைந்து கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட விஷயமானது உங்களுக்கு ஏதேனும் மோசமான விஷயங்கள் நடக்கப்போகிறது என உணர்த்தக்கூடிய அறிகுறியாகும்.
எளிய பரிகாரம் :
கெட்ட சகுனம் எதிர்கொண்டால் இந்த எளிய பரிகாரத்தைச் செய்யவும்:
மேலே குறிப்பிட்டது போன்ற கெட்ட சகுனங்களைத் தாண்டி உங்கள் மனதில் ஒருவித பதற்றம் ஏற்படும் போது அல்லது கெட்ட சகுனங்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் அனைத்து கெட்ட சகுனத்தால் கெட்ட விஷயம் மட்டும் தான் நடக்கும் என்பது அவசியமில்லை.
இப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் நாராயணன் கவசம் பாராயணம் செய்வது நல்லது.
மேலும் நாம் அலைத்ததும் வந்து நமக்கு உதவக்கூடியவர் நரசிம்ம பெருமான். அவரை வழிபாடு செய்வது நல்லது.
சம்பிரதாயம் :
1. தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் பழக்கம், மரபு அல்லது நடைமுறைவிருந்தினருக்குத் தாம்பூலம் கொடுப்பது ஒரு சம்பிரதாயம்மதச் சம்பிரதாயப்படி அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2. ஈடுபாடு இல்லாமல் சடங்குபோல் செய்யப்படுவதுகல்யாணத்துக்கு வந்துவிட்டுச் சாப்பிடாமல் போகக் கூடாது. சம்பிரதாயத்துக்குப் பாயசமாவது சாப்பிடுங்கள்.
3. (கலைகளில்) மற்றவற்றிலிருந்து தனித்துத் தெரியும் பாணிஇந்த இளம் பாடகர் மதுரை சோமு சம்பிரதாயத்தைப் பின்பற்றிப் பாடுகிறார்.