உங்கள் லக்கினமும் தொழில் லாபமும்

ஒருவரின் லக்கினமும் அதன் அதிபதி நின்ற பாவகமும் மற்றும் பத்தாம் அதிபதி நின்ற பாவகமும் அவரின் தொழில் லாபத்தினை தீர்மானம் பண்ணும்.

மேஷ லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் மேஷ ராசியை தனது ஜென்ம லகினமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான்.

இந்த மேஷத்திற்கு பத்தாம் இடம் மகரம். பத்னோன்றாமிடம் கும்பம். இந்த இரண்டு வீடுகளையும் தனது வீடுகளாக கொண்டு சனி திகழ்கின்றார். ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி, பதினொன்றுக்குடைய இலாபாதிபதி சனி.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

இரும்பு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணி கிடைக்கும்
விவசாயிகளாகவும் மாறலாம்
நெருப்பினால் எவை எல்லாம் இயங்குகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் எளிதில் வேலை கிடைக்கும்.
பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம், வெள்ளி, கனிம பொருட்கள், நிலக்கரி, தாது உப்புகள் ஆகிய தொழிற்சாலைகளில் பணி கிடைக்கலாம்.
மருத்துவ துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
இராணுவத்திற்கு முயற்சி செய்தால் அதில் உத்தியோகம் பெறலாம்
காவல் துறையில் வேலை கிடைக்கும்
பொதுவாக பத்துக்கு உரியவர் சனியாக இருக்கும் பட்சத்தில் எத்தொழிலை செய்த போதிலும் அதில் கடினமான உழைப்பை செய்ய வேண்டியது வரும்.
பத்துக்குடைய சனி சரியான இடத்தில் அமர்ந்திருந்தாரேயானால் அவர்கள் பிறரிடம் அடிமைஉத்தியோகம் செய்யாமல் தங்களாகவே சொந்த தொழிலை செய்வார்கள்.

மேலும் படிக்க : அறிவின் வகைகள் மற்றும் எண்ண புரிதல்கள்

ரிஷப லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் ரிஷப லக்னத்தை தனது ஜென்ம லக்னமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக சுக்ரன் திகழ்கின்றான்.

ரிஷபத்திற்கு பத்தாம் இடம் கும்பம், பதினொன்றாம் இடம் மீனம். இந்த இரண்டு வீடுகளில் கும்பத்தை தனது சொந்த வீடாக கொண்டவர் சனி. மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி. பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

உணவு விடுதி வைத்து நடத்தலாம்
சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் ஈடுபடலாம்
அழகு சாதன பொருகள் சம்மந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம்
பெண்கள் விரும்பக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள், கற்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

மேலும் படிக்க : அறிவினை சார்ந்த உணர்வுகளும் உண்மைகளும்

மிதுன லக்னத்தைப் பெற்றவர்கள்

மிதுன லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான்.

மிதுனத்திற்கு பத்தாம் இடம் மீனம். பதினொன்றாம் இடம் மேஷம். மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

கம்ப்யூட்டர் துறை இவர்களுக்க்கு மிகவும் ஏற்றது.
பொறியியல் துறை ஏற்றது
விமான துறை பிரிவுகளில் வேலை தேடலாம்
பதிப்பகத் துறையில் நூல் வெளியீடு செய்வது நல்ல பலன் தரும்
ரேடியோ, தொலைகாட்சி போன்ற துறைகளில் வேலை கிடைக்கும்
செய்தி ஸ்தாபனங்களில் பணி புரியலாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி கிடைக்கும்
எங்கெங்கு பணம் புலங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாகஇருக்க வாய்ப்பு கிட்டும்.
கணக்காளராக பணி கிடைக்கும்

மேலும் படிக்க : உணர்வு வெளிப்பாட்டின் விளைவுகளும் தீர்வுகளும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

கடக லக்னத்திற்கு உரியவனாக சந்திரன் திகழ்கின்றான். கடகத்திற்கு பத்தாம் இடம் மேஷம். பதினொன்றாம் இடம் ரிஷபம். மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் சுக்கிரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த தொழிலும் இந்த லக்னத்திற்கு நல்லது.
கப்பல் போக்குவரத்து துறையில் வேலை கிடைக்கும்
மீன் பிடி தொழில் ஏற்றது.
உப்பு வியாபாரம் ஏற்றது
இராணுவத்தில் வேலை கிடைக்கும்
காவல் துறையில் வேலை கிடைக்கும்
ஜவுளி வியாபாரம் பலன் தரும்

மேலும் படிக்க : ஆன்மீகத்தின் உணர்வும் அறிவியலின் உணர்வும்

சிம்ம  லக்னத்தைப் பெற்றவர்கள்

சிம்ம லக்னத்திற்கு உரியவனாக சூரியன் திகழ்கின்றான். சிம்மத்திற்கு பத்தாம் இடம் ரிஷபம், பதினொன்றாம் இடம் மிதுனம். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் (ஜீவனாதிபதி) சுக்கிரன். மிதுனத்தை சொந்த வீடாக கொண்டவர் (லாபாதிபதி) புதன்,

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

போலிஸ், செக்யுரிட்டி முதலான காவல் பணி கிடைக்கும்.
வனத்துறை பணிகள் கிடைக்கும்
கணினி துறையில் வேலை கிடைக்கும். குறிப்பாக சிஸ்டம் அட்மினிஸ்டிரேடர், நெட்வொர்க் அட்மினிஸ்டிரேடர் போன்ற பணிகள் சுலபமாக கிடைக்கும்.
அரசாங்க துறையில் எளிதில் வேலை கிடைக்கும்
அரசியலில் இவர்கள் ஈடுபட்டால் வெகு விரைவில் முன்னுக்கு வருவர்
நிலத்துக்குக் அடியில் உள்ள நன்நீரை வரவழைத்தல், சுரங்கம் தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகள் முதலானவை கிடைக்கும்

மேலும் படிக்க : அறிமுகமும் நமது அடுத்த வாழ்வியலும்

கன்னி லக்னத்தைப் பெற்றவர்கள்

கன்னி லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். பத்துக்குடைய ஜீவானாதிபதி புதன், பதினோன்ருகுடைய லாபாதிபதி சந்திரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

லக்னத்திற்கும், பத்திற்கும் உரியவனாக இரு வீட்டு ஆதிபத்தியம் பெற்ற புதன் முழுவதுமாக பிறரை அதிகாரப்படுத்தும் தொழிலையே பெற்றவனாகின்றான். எனவே மற்றவர்களை அதிகாரபடுத்தி வேலை வாங்கும் எத்தொழிலும் இவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.
மேலும் நுண்மையான கலைதொடர்புடைய பணிகள் பலவற்றைச் செய்யலாம்.
இசை பாடியோ, பயிற்றுவித்தோ வாழ்க்கை நடத்தலாம்.
எழுத்தாளர்கள் ஆகலாம்
நாட்டியம் ஆடுவதன் மூலம் ஜீவனம் செய்யலாம்
கலை சம்மந்தப்பட்ட தொழில்களை செய்யலாம்
கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளிலும் இவர்கள் ஈடுபடலாம்.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

துலாம் லக்னத்தைப் பெற்றவர்கள்

துலாம் லக்னத்திற்கு உரியவனாக சுக்கிரன் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் கடகம். பதினொன்றாம் இடம் சிம்மம். பத்துக்குடைய ஜீவனாதிபதி சந்திரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சூரியன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

பெண்கள் எவை எல்லாம் விரும்புகின்றார்களோ, அத்தகைய பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
பேன்சி ஸ்டோர் வைக்கலாம்.
வீட்டுக்கு உபயோகமான அரிசி, பருப்பு, புளி விற்கும் மளிகை வியாபாரம் செய்யலாம்.
காய்கறி, பூ வியாபாரம் செய்யலாம்
மாட்டின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம்.
வெள்ளை நிறமுள்ள பொருட்களை விற்பனை செய்யலாம்.

மேலும் படிக்க : வீரபத்திரர் பற்றிய அபூர்வ தகவல்கள்

விருச்சிக லக்கினத்தை பெற்றவர்கள்

விருசிக லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் சிம்மம். பதினோன்றாம் இடம் கன்னி. பத்துக்குடைய ஜீவனாதிபதி சூரியன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி புதன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

ஜோதிடம் சொல்லி இவர்கள் சம்பாதிக்கலாம்
மந்திரவாதங்கள் செய்து, மந்திரவாதிகள் என்று புகழ் பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம்
செப்படி வித்தை, மாயா ஜாலம், கண்கட்டு வித்தைகள் ஆகியவற்றை செய்தும் வருமானம் பண்ணலாம்.
நீதி துறையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும்
மக்களுக்கு பயன்படும் எதையாவது கண்டுபிடித்து புகழ் அடைந்து அதன் மூலம் பலன் பெறுவர்.
ரசாயன துறைகளில் ஈடுபடுவர்.
மருத்துவ துறையில் இவர்களில் பலர் ஈடுபடுபவர்.

தனுசு லக்னத்தை பெற்றவர்கள்

தனுசு லக்னத்திற்கு உரியவனாக குரு திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் கன்னி ஆகும். பதினோன்றாம் இடம் துலாம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி புதன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சுக்ரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

இவர்கள் மரத்தினாலான பொருட்களை இலாபகரமான முறையில் விற்பனை செய்யலாம்.
ரசாயான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.மருத்துவ சம்மந்தபட்ட தொழிலில் பணியாற்றலாம்.
கட்டடம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடலாம்,
கட்டடம் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடலாம்.

மேலும் படிக்க : கும்பகோணம் பற்றிய அறிய ரகசியங்கள்

மகர லக்னத்தை பெற்றவர்கள்

மகர லக்னத்திற்கு உரியவனாக சனி திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் துலாம் ஆகும். பதினோன்றாம் இடம் விருசிகம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி சுக்ரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி செவ்வாய்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

இவர்கள் இரசாயன சம்மந்தப் பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள்
சட்டத்தால் குற்றம் என்று ஒதுக்கப்படும் பலவித பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
தண்ணீர், திரவம் போன்ற பொருட்களினால் தங்கள் நடத்தலாம்.
இவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க : மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

கும்ப லக்னத்தை பெற்றவர்கள்

கும்ப லக்னத்திற்கு உரியவானக சனி திகழ்கின்றான். லக்னதிற்கு பத்தாம் இடம் விருசிகம் ஆகும். பதினோன்றாம் இடம் தனுசு ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி செவ்வாய். பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பொருள் குவிப்பர்.
காவல் துறையில் உத்தியோகம் கிடைகின்றது.
இராணுவத்தில் சேர முயற்சித்தால் பலன் கிடைக்கும்.
குத்து சண்டை முதலான பல்வேறு சண்டைகளின் மூலம் பலன் கிடைக்கும்.
முரட்டுத் தனத்தின் மூலம் வருவாயை பெறக் கூடிய பாக்கியத்தை இவர்கள் அடைகின்றனர்.

மேலும் படிக்க : பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்

மீன லக்னத்தை பெற்றவர்கள்

மீன லக்னதிறகு உரியவனாக குரு திகழ்கின்றார், லக்னதிற்கு பத்தாம் இடம் தனுசு ஆகும். பதினோன்றாம் இடம் மகரம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி குரு. பதினோன்றுக்குடைய லாபாதிபதி சனி.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

இவர்கள் எத்தொழில் செய்தாலும், மற்றவர்கள் கௌரவமாக கருதும் தொழிலாகவே அது அமையும்.
ஆசிரியர்களாக இருக்கலாம்
மதபோதனையாளராக இருக்கலாம்
பிறரை வழிகாட்டி செல்லலாம்
ஆன்மீக துறையில் செல்லலாம்
இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.
புனிதமான வேலையே கிடைக்கும்

மேலும் படிக்க : பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply