திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

திருச்செந்தூர் முருகன் கோவில்
குரு பரிகார தலம்.திருமண தடை
புத்திர தடை தீய ஆவி பாதிப்பு பில்லி சூனியம் பாதிப்பு நிவர்த்தி பரிகார ஸ்தலம்

திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

“தமிழர்களின் கடவுள்” என்று முருகப்பெருமானுக்கு பெயருண்டு. தமிழ் மக்களின் சரித்திரத்தில் முருகனின் வழிபாடு எப்போதும் இருந்து வந்திருப்பதை நாம் அறிகிறோம். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்று முருகன் மலைமீது கோவில் கொள்வதை பற்றி கூறப்படும் ஒரு வாக்கியமாகும். ஆனால் பொங்கி வரும் கடல் அலை “செந்திலாண்டவனின்” பாதம் பணியும் கடற்கரையில் கோவில் கொண்டிருக்கும் “திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின்” சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

திருச்செந்தூர் முருகன் கோவில் தல வரலாறு

மிகவும் பழமையானது இந்த திருச்செந்தூர் கோவில். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் “செயந்தியாண்டவர்” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “செந்திலாண்டவர்” என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் “திருசெயந்தியூர்” என்பதிலிருந்து “திருச்செந்தூர்” என்று மாறியது. முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாவதாகவும், கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒரே படை வீடாக இருப்பதும் இந்த திருசெந்தூர் தான்.

கந்த புராணத்தின் படி கச்சியப்ப சிவாச்சாரியார் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்தையும் காக்கவும், அசுரர்களை அழிக்கவும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் யாகம் வளர்த்து, கும்பத்தில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியாரும் மற்றவர்களும் முருகனுக்கு சஷ்டி நோன்பு இருந்தனர். இதனால் மனம் குளிர்ந்த முருகன் அவர்களுக்கு அருளினார். இதனை நினைவு கூறியும் விதமாகவே ஐப்பசி மத அமாவாசைக்கு பிறகு கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க : சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்

தேவர்களுக்கு உதவ சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்த ஆறு சக்திகள், ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, ஆறு உருவங்களும் ஒன்று சேர்ந்து, முருகனாக உருப்பெற்றார். ஆறு முகத்தை தனது உருவில் கொண்டிருப்பதால், முருகனுக்கு “ஆறுமுகம்” என்ற பெயரும் உண்டு. சூரபத்மனுடன் போர்புரிய இந்த கடற்கரைக்கு முருகப்பெருமான் வந்த போது, நவகிரகங்களில் சுபகிரகம் ஆனவரும், தேவர்களுக்கு குருவாக இருப்பவரான “குரு பகவான்” இங்கு தவமியற்றி கொண்டிருந்தார். சிவனின் மைந்தனான முருகனை பணிந்து வணங்கிய குரு பகவான் அசுரர்களின் வரலாற்றை பற்றி கூறி, சூரபத்மனை போரில் வெல்வதற்கு முருகப்பெருமானுடனும், அவரது படையினருடனும் ஆலோசனை செய்து சிறந்த அறிவுரைகளை வழங்கினார். இதனால் மிகவும் மகிழ்ந்த முருகப்பெருமான் தான் இங்கே கோவில் கொள்ளும் வரத்தை அருளினார். இதனால் மகிழ்ந்த குரு பகவான் விஸ்வகர்மாவை அழைத்து இங்கு கோவில் எழுப்பினார். எனவே இங்கு கோவில் கொண்டிருக்கும் செயந்தி நாதரை வணங்குவதால் குருபகவானின் அருளும் நமக்கு கிடைக்கிறது

முருகனுக்கு ஆறு படை வீடுகள் என்று வழக்கமாக கூறப்படும் ஒரு வாக்கியமாகும்.போர்வீரர்களின் குழுமத்தை படை என அழைப்பார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அளிப்பதற்கு தனது போரிடும் படை வீரர்களோடு தங்கியிருந்த இடம் திருச்செந்தூர் தலமாகும். எனவே “படை வீடு” என அழைக்கப்படும் தகுதி திருச்செந்தூருக்கு மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் தன்னை காண வரும் பக்தர்களின் அனைத்து கஷ்டங்களையும் போக்கும் முருகனின் “ஆற்றுப்படுத்தும்”( ஆறுதல் அளிக்கும்) வீடுகள், “ஆறு படைவீடுகளாக” மாறிப்போனது.

சூரபதம்னை ஐப்பசி மாதம் சஷ்டி தினத்தில் முருகபெருமான் வதம் செய்ததால், இங்கு கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் மிக சிறப்பான முறையில் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் போது மக்களின் நன்மைக்காக, சண்டி யாகம் செய்யப்படுகிறது. ஆறு நாட்கள் நடக்கும் இந்த கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கில் மக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் கூடுவர்.

தல சிறப்பு

இங்கு கோவில் கொண்டிருக்கும் செந்தில் ஆண்டவர் நவகிரகங்களில் குரு பகவானின் சாராம்சத்தை கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பெற்று, அவரது திசை காலத்தில் சிறந்த நன்மைகளை பெற பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இந்த திருசெந்தூர் கோவில் சிறந்த குரு பரிகார தலமாகும். அரசியலில் பல வெற்றிகளையும், உயர்பதவிகளையும் பெற விரும்புபவர்கள் இக்கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். முருகன் அசுரர்களை வதம் செய்தவர் என்பதால் தீய ஆவி பாதிப்பு கொண்டவர்கள், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபடலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, கோவிலை வலம் வந்து வழிபட நன்மக்கள் பேற்றை அருள்வார் முருகன்

மேலும் படிக்க : ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022

அனைத்து கோவில்களிலும் உற்சவர் ஒன்று தான் இருக்கும். ஆனால் இந்த திருச்செந்தூர் கோவிலில் “சண்முகர், ஜெயந்திநாதர், குமராவிடங்கர், அலைவாய் பெருமாள்” என்று நான்கு உற்சவர்கள் இருக்கினர். திருச்செந்தூர் முருகனுக்கு தினமும் 9 கால பூஜைகள் நடக்கிறது. இப்பூஜையின் போது சிறுபருப்பு பொங்கல், அப்பம், கஞ்சி, தோசை, நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், வெல்லம் கலந்த உருண்டை ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப்பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது.

முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடு தான் திருச்செந்தூர் ஆகும்

பெயர்க்காரணம்

சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ‘செயந்திநாதர்’ என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி ‘செந்தில்நாதர்’ என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் ‘திருசெயந்திபுரம்’ என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு

முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும்

இங்கே முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்றுவந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது. மேலும் முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதி ஒன்றும் இருக்கிறது.மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கங்கை பூசை

தினமும் மதியம் உச்சிகால பூசை முடிந்தபிறகுஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இந்த சடங்கே ‘கங்கை பூஜை’ எனப்படுகிறது.

மஞ்சள் நீராட்டு

திருமணத்திற்கு முன்பு கன்னிப்பெண்கள் தங்கள் முறைப்பையனுக்கு மஞ்சள் நீரூற்றி மகிழ்வர். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளன்று தனது மனைவிதெய்வானையுடன் வருகையில் தங்கள் ஊரில் தெய்வானையை திருமணம் செய்துகொண்டதற்காகவும் போரில் வெற்றிவாகை சூடிவந்த முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.

மேலும் படிக்க : ஜோதிடம் என்பது என்ன?

இரண்டு முருகன்

சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் சிவபூஜை செய்தபடி ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கிறார். சுப்பிரமணியரின் தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் சன்முகருக்கே செய்யப்படுகிறது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி என மற்ற முருகன் கோயில்களில் கொண்டாடப்படுவது போலவே இங்கும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கோவில் அமைவிடம்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை

உங்கள் சுய ஜாதகம் கணித்து ஆடியோ பதிவின் மூலமாக பலன் அறிய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து தொடர்பு கொள்ளவும்.

Whatsapp : https://wa.me/message/U7Q6TEACBMTQJ1

Payment    : https://paytm.me/N-dj2Cb

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி

ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

 

 

Leave a Reply