நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம்.
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம்.
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.
மேலும் படிக்க : சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்
சந்திரனின் முக்கியத்துவம்
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும்.
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான்
பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.
மேலும் படிக்க : கால சர்ப்ப தோஷமா? யோகமா?
சந்திராஷ்டமம்
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
சுப காரிய முயற்சி
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.
புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.
மேலும் படிக்க : ஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்
எதிர்மறை எண்ணங்கள்
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள்
வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.
மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.
ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.
ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.
ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.
பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.
மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்
17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்
உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
மேலும் படிக்க : உங்கள் ஜாதகம் சொல்லும் உங்கள் தொழிலை
பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி – அனுஷம்
பரணி – கேட்டை
கிருத்திகை – மூலம்
ரோகிணி – பூராடம்
மிருகசீரிஷம் – உத்திராடம்
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – அவிட்டம்
பூசம் – சதயம்
ஆயில்யம் – பூரட்டாதி
மகம் – உத்திரட்டாதி
பூரம் – ரேவதி
உத்திரம் – அஸ்வினி
அஸ்தம் – பரணி
சித்திரை – கிருத்திகை
சுவாதி – ரோகிணி
விசாகம் – மிருகசீரிஷம்
அனுஷம் – திருவாதிரை
கேட்டை – புனர்பூசம்
மூலம் – பூசம்
பூராடம் – ஆயில்யம்
உத்திராடம் – மகம்
திருவோணம் – பூரம்
அவிட்டம் – உத்திரம்
சதயம் – அஸ்தம்
பூரட்டாதி – சித்திரை
உத்திரட்டாதி – சுவாதி
ரேவதி – விசாகம்
சந்திராஷ்டமம் நாளில் சிலர் வாயை கூட திறக்கமாட்டார் எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விடுவார்கள். சிலருக்கு கோபமும் எரிச்சலும் அதிகமாகும். சிலரோ ஒருவித புழுக்கத்துடன் இருப்பார்கள். மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த நாட்களில் அமைதியாக இருந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும் போதே சந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.
பிறந்த ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. திருமண முகூர்த்தம் தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும். சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும்.
சந்திராஷ்டம நாளில் பரிகாரம்
மேஷம் விருச்சிகம்
சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் சில பரிகாரங்களை செய்து விட்டு முக்கிய காரியங்களை செய்யத் தொடங்கலாம். மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து விட்டு சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.
ரிஷபம் துலாம்
ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம். துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்
மிதுனம் கன்னி
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து விட்டு பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம். கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து விட்டு பின்னர் கண்ணனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
கடகம் சிம்மம்
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.
தனுசு மீனம்
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து விட்டு பின்னர் குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். மீனம் ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.
மகரம் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். பரிகாரம் மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் செய்யும் நன்மைகள்
சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சந்திராஷ்டமம் எந்தெந்தவிதமான நற்பலன்களை உண்டாக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
சந்திராஷ்டம நாட்களில் மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை சந்திரன் எட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும், அந்நாட்களில் மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்துவரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபத்தினைத் தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
ரிஷபம்
பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சலை சந்தித்தாலும் அதற்கான லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.
மிதுனம்
பொதுவாக சந்திராஷ்டம நாட்களில் மிதுன ராசிக்காரர்கள் அதிக சிரமத்தினை சந்திப்பார்கள் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவி
செய்து புகழ்பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர்கள்மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த நற்பெயர் கிடைக்கும். கௌரவம் உயரும். பிள்ளைகளின் உத்தியோகத்திற்கு அன்றைய தினம் செய்யும் உதவி நல்லதொரு வெற்றியைத் தரும்.
கடகம்
வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். கடன் சுமை குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமானாலும் நல்ல லாபத்தினைக் காண்பர்.
சிம்மம்
சந்திராஷ்டமத்தினால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்களும், பொருளிழப்புகளும் தவிர்க்கப்படும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். வீண் அலைச்சல் குறையும். ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். மூத்த சகோதரருக்கு செய்யும் உதவி குறிப்பிடத்தகுந்த நன்மையை உண்டாக்கும்.
கன்னி
லாபத்தில் நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்து நற்பெயர் அடைவர்.
துலாம்
துலாம் ராசியைப் பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்றிருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றவகையில் மிகுந்த நன்மை காண்பர். தொழில் முறையில் சிறிது சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும் செய்யும் தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் இருந்துவரும் சேமிப்புகள் உயரும். வண்டி, வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்
சந்திராஷ்டம நாட்களில் வீண் பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்து கொள்வர். அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்காண வழிகளை அறிந்து கொள்ள முடியும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். கடன் சுமைகள் குறையும்.
தனுசு
செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத் தொழிலில் நல்ல தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் சிறப்பான தன லாபத்தினை காண்பர். நலிந்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயரை அடைவர்.
மகரம்
வாழ்க்கைத் துணையின் பெயரில் சேமிப்புகள் உயரும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத் தொழில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டினைச் சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும். ஆன்மிக கருத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும்.
கும்பம்
சந்திராஷ்டமத்தினால் அதிக நன்மை அடைபவர்களில் கும்ப ராசிக்காரர்கள் முக்கியமானவர்கள். ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில்
அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழந்து போகும். எதிரிகள் வலுவிழப்பார்கள். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமான முடிவினைத் தரும். கடன் சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும். தொழில் முறையில் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் குறிப்பிடத் தகுந்த தன லாபம் உண்டாகும்.
மீனம்
பிள்ளைகளின் பெயரில் இருந்துவரும் சேமிப்புகள் உயரும். வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் செயல் வடிவம் பெறும். கூட்டு முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வர். கடன் சுமை குறையும். வாழ்க்கைத் துணையின் பணியில் இவர்கள் செய்யும் உதவிகள் நல்ல தன லாபத்தினைப் பெற்றுத் தரும். தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகும்.
இப்படி சந்திராஷ்டம நாட்களில் 12 ராசிக்காரர்கள் பல நன்மைகளும் நடப்பதை அனுபவபூர்வமாகக் காண இயலும். மன உளைச்சலைத் தரும் நாட்கள் அவை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் செயல் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் குறித்து எந்த விதத்திலும் பயம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் படிக்க : செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்
மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,
நற்பவி நற்பவி நற்பவி
என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்
நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்