சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்

சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்?

ராஜகிரகங்களில் ஒன்றான சந்திரன் மிக வேகமாக இடம் மாறும் ஒரு கிரகம்.

நமது எண்ணத்துக்கு காரணமாக உள்ள கிரகமாக உள்ளதால் மனோகாரன் என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் தந்தைக்கு உரிய கிரகமாக இருப்பதைப் போல் தாய்க்கு உரிய கிரகம் சந்திரன் ஆகும்.

பூமியைச்சுற்றி வரும் சந்திரன் மனிதனால் கண்டறியப்பட்ட செயற்கைக்கோளைப் போல்

மற்ற கிரகங்களின் கதிர்வீச்சை உள்வாங்கி ஒவ்வொருவருக்கும்

அவர்களது தசா புத்தியை அனுசரித்து எண்ண ஓட்டங்களை உருவாக்குகிறது.

எண்ணங்களே செயல்களாக உருவாகிறது.

மேலும் படிக்க :சந்திராஷ்டமம் பயம் தவிர்த்து ஜெயம் பெற

ஒருவருக்கு லக்னமே பிரதானம். லக்னம் நன்றாக இருந்தால் எப்படியும் ஒரு மேன்மை கிடைக்கும்.

லக்னம் கெட்டு பிற ஸ்தானங்கள் நன்றாக இருந்தால் அதிக பிரயோஜனம் இருக்காது.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும்.

💢லக்னம் எப்படி வலுஇழக்கும்?

🌹லக்னத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்களான செவ்வாய்,ராகு,கேது,சூரியன்,சனி போன்ற கிரகங்கள் இருத்தல்

🌹லக்னாதிபதியுடன் பாவகிரகங்கள், இணைதல்

🌹6,8,12ல் மறைதல்

🌹நீசம் அடைதல்

🌹அஸ்தமனம் அடைதல்

🌹லக்னத்தையும், லக்னாதிபதியையும், அசுப கிரகங்கள் பார்வை செய்தல்

(இதுவே சுபகிரகங்கள் பார்வை செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்)

மேலும் படிக்க : கால சர்ப்ப தோஷமா? யோகமா?

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளில் லக்னம் கெட்டு இருந்தால் அவருக்கு லக்னம் வேலை செய்யாது

விதி என்ற லக்னம் கெடும் போது சந்திரன் என்ற மதியைத்தான் பார்க்க வேண்டும்.

சந்திரனும் கெட்டவர்கள் கதி என்ற சூரியனை பார்க்க வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தை அடுத்து சந்திரன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதன் மூலம் நன்கு அறியலாம்.

🌘சந்திரன்

🌕ரிஷப ராசியில் உச்சம் பெற்று பலம் பெறுகிறது.

🌕 கடக ராசியில் ஆட்சி பெற்று பலம் பெறுகிறது.

🌕விருட்சிக ராசியில் நீசம் அடைந்து தன் பலத்தை இழக்கிறது.

🌕12 ராசிகளில் சந்திரனுக்கு எந்த வீடும் பகை இல்லை.

⬆பெளர்ணமி திதிக்கு அருகில்(முன்,பின்) செல்லும் சந்திரன் குருவுக்கு இணையான முழு சுபகிரகமாக செயல்படும்

⬇அமாவாசை திதிக்கு அருகில்(முன்,பின்)

செல்லும் சந்திரன் சனிக்கு இணையான

முழு அசுப கிரகமாக மாறும்.

பெளர்ணமி திதியில் பிறந்து அதன் 7ம் பார்வை மற்ற கிரகங்களின் மீது விழுந்தால் அந்த கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் பலம் பெற்று சுப பலனைத் தரும்.

இதுவே அமாவாசை சந்திரனின் பார்வை சனியின் பார்வைப் பலனைப் போல் அசுப பலனாகவே இருக்கும்.

மேலும் படிக்க :ராசியை போல கரணமும் முக்கியம்

ஒருவருக்கு லக்னம் எப்படி முக்கியத்துவமாக உள்ளதோ அதேப் போல் சந்திரனும்

🌹ராகு,கேது போன்ற சர்ப கிரகங்களிடம் சிக்கி கிரகணத்தில் இருக்க கூடாது.

🌹சூரியனுடன் இணைந்து தன் பலத்தை சூரியனுக்கு பலி கொடுக்கும் அமாவாசை நிலையிலும் இருக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்க வேண்டும்.

🌹சனியுடன் இணைந்து புனர்பூ தோஷமாகவும் கூடாது.

🌹லக்னத்திற்கு 6,8,12ல் மறைந்தும் இருக்க கூடாது.

சந்திரன் மனக்காரன் என்பதால் நிலையான எண்ணங்கள் சந்திரன் பாதிக்கப்பட்டவருக்கு இருக்காது.

உறுதியான மனநிலை இல்லததால் எந்த ஒரு காரியத்தையும் திறன்பட செய்ய இயலாத நிலையில் ஜாதகர்கள் இருப்பார்கள்.

☀சந்திரன் தரும் யோகங்கள்:

🌷குருச்சந்திரயோகம்:

சந்திரனுக்கு திரிகோணமாண (1,5,9)ல் குரு இருந்து அதற்கு உரிய தசா நடைபெற்றால் இந்த யோகம் (அதிக வருவாய்) கிடைக்கும் ஆனால்

இரண்டு கிரகங்களும் பலவீனமாக இருக்க கூடாது.

🌷கஜகேசரி யோகம்

சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் (4,7,10)ல் குரு இருந்து அதற்கு உரிய தசா நடைப் பெற்றால் இந்த யோகம் (எதிரியை வெல்லும்) கிடைக்கும். ஆனால்

இரண்டு கிரகங்களும் பலவீனமாக இருக்க கூடாது

🌷சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் (4,7,10)ல் செவ்வாய் இருந்து அதற்கு உரிய தசா நடைப் பெற்றால் இந்த யோகம் (வீடு, மனை, வருமானம்) கிடைக்கும்.

இரண்டு கிரகங்களும் பலவீனமாக இருக்க கூடாது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌕சந்திர தசா யாருக்கு யோகம் தரும்

🌹சந்திரன் கெடாமல் ஒருவருடைய சாதக ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், திக் பலம் அல்லது கேந்திர, திரிகோண அமைப்பில் அமைந்து தனது நண்பர்களின் வீடான சூரியன்,புதன்,குரு செவ்வாய் வீட்டையும் தனது வீட்டையும் லக்னமாக கொண்டவருக்கு நல்ல யோகத்தை அளிக்கும்

அதாவது

🌷கடக லக்னம்

🌷சிம்ம லக்னம்

🌷கன்னி,மிதுன லக்னம்

🌷மேஷம்,விருட்சிக லக்னம்,

🌷தனுசு,மீன லக்னம்

மேலே குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசா யோகம் அளிக்கும்.

மேலும் படிக்க :பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்

யாருக்கு அவயோகம் தரும்?

🌷கும்ப லக்னம்:

கும்ப லக்னத்திற்கு ஆறாவது வீட்டின் அதிபதியாக உள்ள சந்திரன் கடன்,வம்பு வழக்கு நோய் என்ற கெடுபலனை தன் தசாவில் தருவதால் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு அவரது தசாவில் அதிக யோகம் தரமாட்டார்

🌷மகர லக்னம்

லக்கினத்திற்கு மாரக கண்டக ஸ்தானத்தில் சந்திரன் வருவதால் தன் தசாவில் தருவதால் நல்ல யோகமில்லை இந்த லக்னத்தில் பிறந்தவருக்கு.

🌷ரிஷபம்,துலாம் லக்னம்:

சந்திரன் தேவகுரு அணியில் இருப்பதால் அசுர குருவின் தலைவன் ஆன சுக்கிரனை லக்னமாக கொண்டவருக்கு (ரிஷபம், துலாம்) நல்ல யோகத்தை வழங்குவது இல்லை.

🌹சந்திரன் தரும் நோய்கள்:

🔴சளி,

🔴காய்ச்சல்,

🔴நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள்(ஆஸ்துமா…),

🔴மனநிலை பாதிப்பு

🔴நீரில் கண்டம்

🔴நீர் வாழ் உயிரினத்தால் பாதிப்பு

🔴தூக்கம் இன்மை

🔴மஞ்சள் காமாலை

🔴ரத்த சம்மந்தப்பட்ட நோய்கள்

🔴சீதபேதி

🔴அல்சர்

அமாவாசை,பெளர்ணமி திதிகளில் சந்திரனின் ஆற்றல் அதிக அளவில் பூமியில் விழுவதால்

🌷கடல் ஆக்ரேஷமாகவும்

🌷நோயாளிகளுக்கு கண்டமாகவும்

🌷மனநிலை பாதித்தவர் மிகவும் ஆக்ரேஷமாகவும் இருப்பார்கள். இது யாவரும் அறிந்த உண்மை.

திருப்பதியில் சந்திரனின் கதிர்வீச்சு கர்பகிரகத்தில் அதிகப்படியாக வெளிப்படுவதால் தரிசிக்கும் அனைவருடைய எண்ணங்கள் எல்லாம் மறைந்து பெருமாளிடம் வேண்டாமலே ஒரு பரவசநிலையில் வெளி வந்து விடுகிறோம்

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply