ராசியை போல கரணமும் முக்கியம்

ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ராசியை போல கரணமும் முக்கியம்

சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. அப்படியான சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும். மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும். அதிதேவதைகளும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசியங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க : உங்கள் லக்கினமும் தொழில் லாபமும்

1)பவம் கரணம் :அதிதேவதை இந்திரன்

இக்கரணத்தவர்கள் சற்று ஏழ்மையானச் சூழ்நிலையில் பிறந்தாலும், மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம் இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம், காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்புரிவர்.இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் சிங்கம்

2)பாலவம் கரணம் :அதிதேவதை பிரம்மா

இக்கரணத்தில் பிறந்தவர்கள் அழகானத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமானது துறைகளில் சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு புலி.

3)கெளலவம் கரணம் :அதிதேவதை சூரியன்

கெளலவ காரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சில தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இக்கரணத்தில் துணிந்து செய்யலாம். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் பன்றி

4)தைதுலம் கரணம்:அதிதேவதை ஆதித்யன்

இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள்.
இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் கழுதை.

5)கரஜை கரணம்:அதிதேவதை பூமாதேவி

இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற காலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இகரணத்திற்கான உருவம் யானை.

6)வணசைகரணம்:அதிதேவதை லஷ்மி

இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது.

7)சகுனிக் கரணம்:அதிதேவதை கலி புருஷன்

இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். போர்புரியவும்,நோய்த் தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக் கொடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்கை.

8)பத்ரை கரணம்:அதிதேவதை யமன்

இவர்களும் இங்கு கூறப்பட்ட சில கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஆனால் ஏவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கோழி.

9)சதுஷ்பாதம் கரணம் : அதிதேவதை ருத்திரன்

இக்கரணங்களிலில் பிறந்தவர்கள் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய வியாபாரத் தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இவர்களுக்கான விலங்கு உருவம் நாய்.

10)நாகவம் கர்ணம் :அதிதேவதை சர்ப்பம்

நாக காரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர். நல்ல குணாதியசங்கள் இவர்களிடம் காணப்படும். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களிலில் சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.

11)கிம்ஸ்துக்னம் கரணம்:அதிதேவதை வாயு

இக்கரணத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அனால் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.

மேலும் படிக்க : ஜென்ம நட்சத்திர மகிமையும் செய்யவேண்டியவையும்

ஜாதகத்தில் கரணநாதன் என்றால் என்ன?

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். … வணிஜை,சதுஷ்பாதம் ஆகிய இரண்டு கரணங்கள் மத்திமமான சுபதன்மக் கொண்டவை. பத்திரை(விஷ்டி),சகுனி,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய 4 கரணங்கள் அசுப தன்மை கொண்டவைகள்.

கர்ண நாதனுக்கு உரிய கிரகம் சுய ஜாதகத்தில் வலிமை இழக்க கூடாது.

மேலும் படிக்க : கால சர்ப்ப தோஷமா? யோகமா?

கரணநாதன் இயக்கம் முறை

கர்ண நாதனுக்கு உரிய கோவில் வழிபாடு செய்தல்(அந்த கர்ண நேரத்தில்)

கர்ண மிருகத்தை பயன்படுத்துதல்
அதை துன்புறுத்தாமல் இருப்பது.

கர்ண நாதனுக்கு உரிய உயிர் காரகத்தை அருகில் வைத்திருத்தல்.
(செவ்வாய் என்றால் சகோதரன் இல்லாவிட்டாலும் ஆத்மார்த்தமாக ஒருவரை சகோதரராக பாவித்து வைத்து கொள்ள வேண்டும்).

இப்படி சில முறைகளை பயன்படுத்தி கர்ணநாதனை வலுப்படுத்தலாம்.

கர்ணநாதனை வலுப்படுத்துவதால் என்ன நிகழும்:

உங்கள் லக்னத்திற்கு எந்த பாவத்தில் உங்கள் கர்ண நாதன் இருக்கிறாரோ அந்த பாவத்தின் கெடு பலன் குறையும்.

உதாரணம்:

பவ கரணத்திற்கு உரிய செவ்வாய் ஆறில் இருந்தால் கடன்,வழக்கு நீங்கும்.

செவ்வாயின் பார்வைபடும் 9,12,2ம் இடங்கள் சுபப்படும்.

சுய ஜாதகத்தில் எந்த கிரகம் செவ்வாய் சாரம் பெற்று உள்ளாரோ அவை அனைத்தும் சுபத்துவம் அடையும்.

இப்படி அனைத்து வகையிலும் சுபத்துவம் அடைய செய்யும். கர்ணநாதனை வலுப்படுத்தி இயக்கி மேன்மை அடைய முயற்சியுங்கள்.

கர்ணமும் அதற்கு உரிய கிரகங்களும்,மிருகமும் வழிபடவேண்டிய தெய்வங்களும்

மேலும் படிக்க : சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்

பவ கரணம்:

கிரகம்: செவ்வாய்
மிருகம்: சிங்கம்
கடவுள்: லெட்சுமி நரசிம்மர்

பாலவ கரணம்:

கிரகம்: ராகு
மிருகம்: புலி
கடவுள்: ஐயப்பன், காவல் தெய்வம்

கெளலவ கரணம்:

கிரகம்: சனி
மிருகம்: பன்றி
கடவுள்: பூவராக பெருமாள்

கைதூலை கரணம்:

கிரகம்: சுக்கிரன்
மிருகம்: கழுதை
கடவுள் : சேஷ்டா தேவி

கரசை கரணம்:

கிரகம்: சந்திரன்
மிருகம்: யானை
கடவுள்: வினாயகர்

வனிசை கரணம்:

கிரகம் : சூரியன்
மிருகம்: காளை
கடவுள்: நந்திஸ்வரர்

பத்தரை கரணம்:

கிரகம் : கேது
மிருகம்: கோழி
கடவுள்: திருச்செந்தூர் முருகன்

சகுனி கரணம்:

கிரகம்: சனி
மிருகம்: காகம்
கடவுள்: சனிஸ்வரன்,திருநள்ளாறு

சதுர்பாதம் கரணம்:

கிரகம்: குரு
மிருகம்: நாய்
கடவுள்: ருத்ரன், பைரவர்

நாகவ கரணம்:

கிரகம் : ராகு
மிருகம்: பாம்பு
கடவுள்: நாகராஜர்

கிம்ஸ்துக்னம் கரணம்:

கிரகம்: புதன்
மிருகம்: புழு
கடவுள்: தன்வந்திரி

விஷ்டி கரணம்:

கிரகம்: செவ்வாய்
மிருகம்: தேள்
கடவுள்: முருகன் வை. கோவில்

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply