பௌர்ணமி நாட்களில் நாம் விரதம் இருந்த அம்மனை வழிபட்டால் அனைத்து காரியங்களும் நல்ல பலன்களை நமக்கு வழங்கும்.இந்த பதிவினை முழுவதுமாக படிக்கவும். தமிழ் மாத பௌர்ணமி விரதம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் அடங்கிய பதிவு
பௌர்ணமி விரதம்
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க : மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்
மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடுமேற்கொண்டு
உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.
சித்திரை பௌர்ணமி
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது.
சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் பௌர்ணமியில் விரதம் இருந்து அம்பிகையை விளக்கேற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நைவேத்யமாக எழுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் வைக்க செல்வம் நிலைக்கும், தானியம் பெருகும் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும்.
மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
மேலும் படிக்க : சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்
வைகாசி பௌர்ணமி
வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது.
இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.
வைகாசி மாதத்தில்
வரும் பௌர்ணமி
நாளில் அம்பிகைக்கு விரதமிருந்து, விளக்கேற்றி வழிபாடு செய்தால் பிறவா நிலையை அடையலாம்.
நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
மேலும் படிக்க : ஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்
ஆனி பௌர்ணமி:
ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது.
ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.
ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அம்பிகைக்கு விரதம் இருந்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும்.
எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
இந்நாளில் சாவித்ரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும்.
குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும்.
ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.
மேலும் படிக்க : கால சர்ப்ப தோஷமா? யோகமா?
ஆடி பௌர்ணமி
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது.
ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
ஆடி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் விசேஷமானது.
அன்றைய தினத்தில் அம்பிகையை நினைத்து மந்திரங்கள் ஜபித்து, விரதம் அனுஷ்டித்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து வைத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும்.
ஆடி மாத பௌர்ணமியிலும் சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
வடமாநிலத்தவர்கள் கோபத்ம விரதம், சாவித்திரி விரதம்
இந்த பவுர்ணமியில் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
மேலும் படிக்க : பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்
ஆவணி பௌர்ணமி
ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது
பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது.
ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாதம் வரும் பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும்.
இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.
மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.
மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்
புரட்டாசி பௌர்ணமி
புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது.
புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
புரட்டாசியில் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து அம்பிகையை வணங்கி, விளக்கேற்றி வழிபாடு செய்வதனால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும்.
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். புரட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசேஷமானது.
இன்றைய தினத்தில் அம்மை அப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும்.
புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.
மேலும் படிக்க : வீரபத்திரர் பற்றிய அபூர்வ தகவல்கள்
ஐப்பசி பௌர்ணமி
ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும்.
ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.
ஐப்பசியில் வரும் பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும்.
வெண்பொங்கலும், நெய் பொங்கல் படைத்து அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை பௌர்ணமி
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும்.
அன்றைய தினத்தில்தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.
ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி அம்பிகையைத் துதித்து, விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால், பேரும், புகழும் நிலைத்து நிற்கும்.
இம்மாத பௌர்ணமி தீபத் திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
மார்கழி பௌர்ணமி
மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும்.
இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள்.
அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது
மார்கழி மாதம் வரும் பவுர்ணமியில் விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். உடல் நலம் சீராகும்.
நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும்.
மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வந்தால் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
தை பௌர்ணமி
தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது.
இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும்.
தை மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
பாயாசம் நைவேத்தியமாக படைத்து தை மாதம் பவுர்ணமியன்று அம்பிகையை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
தை மாதம் வரும் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட
நற்கதி கிடைக்கும்.
தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.
மாசி பௌர்ணமி
மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது.
இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது.
கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன.
மாசி மாதம் வரும் பௌர்ணமியில் அம்பிகையைத் துதித்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகி ஓடிவிடும். இன்பம் நிலைத்திருக்கும்.
இந்நாளில் சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைத்து ஈசனையும் வழிபடுவது மேலும் சிறப்பானது.
சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.
மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும்.
மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம்.
மேலும் இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை,
வழக்கறிஞர் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் மாசி பௌர்ணமின்று கிரிவல வழிபாட்டால் அதிகப் பலன்களை பெறலாம்
பங்குனி பௌர்ணமி
பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது.
அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.
எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும்.
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபடுவது செய்தால் தர்மம் செய்த பலன் கிடைக்கும்.
அம்பிகைக்கு விளக்கை ஏற்றி பருப்பும், நெய்யும் கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபாடுகள் செய்வதன் மூலம் புண்ணியம் பெறலாம்.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.
மேலும் படிக்க : கும்பகோணம் பற்றிய அறிய ரகசியங்கள்
மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,
நற்பவி நற்பவி நற்பவி
என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்
நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்