அறிமுகமும் நமது அடுத்த வாழ்வியலும்

நமது வாழ்வில் நமக்காக நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் அதிசயம்.நமது எண்ணமும் நமது செயலும் ஒருங்கிணைய இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும் ஒரு அற்புத வாய்ப்பு.

அறிமுகம்

மனிதா,அறிமுகம் ஓர் அதிசயம்.அடிமைப்பட்டு விடாதே.உன்னைப் பற்றி ஒருவருக்கு
ஒருவர் அறிமுகப்படுத்துகிறார்.கேட்டவர் அப்படியே நம்பிஅதன்படி உன்னை அழைக்கிறார்.
சொன்னவரிடம்சொன்னது எல்லாம் சரியா என்றால் எனக்குத் தெரிந்ததை என்னோடு இருப்பதால் என்னவன் என்றேன்.இதில் என்ன தப்பு இருக்கிறது என்னவனாக என்னோடே
இருந்துவிட்டுப் போகட்டுமேஎன்றார்.

மேலும் படிக்க : ஜென்ம நட்சத்திர மகிமையும் செய்யவேண்டியவையும்

சொல்லப்பட்டவரை கேட்டால அவர் அப்படி தான் சொல்கிறார்சொல்லித் தந்தார் நம்புகிறேன்.
காரணம் வேறு ஒன்றும் எனக்குத் தெரியாதே. முடிந்து விட்டது எல்லாம் என்றால் இல்லை.
ஒரு பொய் திணிக்கப்பட்டு விட்டது.

இவன் என்னவன் என்ற பொய் ஒன்றுமே அவனைப்பற்றித் தெரியாமல் எங்கிருந்து வந்தான் ஏன் வந்தான் ஏன் தன்னிடம் வந்தான் எத்தனைக் காலம் இருப்பான் எதற்காக வந்தான் ஒன்றும் தெரியாது.இந்த அடிப்படைப் பொய்யின் மேல்

ஓர் அடுக்குமாடி கட்டுமானம்.அவனும் தன்னை அறிய முடியாதபடிஇந்த கட்டு மானத்துக்குள்.
இதைக் கட்டுமானம் என்பதை விட இடி பாடுகள் என்றால் சிறப்பாக இருக்கும்.
மேலும் மேலும் கொட்டப்பட்ட குப்பைகள் அவனுக்கு பெயர் வைப்பது
உறவு வைப்பது இவர்கள் உதவியை நம்பித்தான் அவன் வாழ்ந்தாக வேண்டும் என்ற
கட்டுத் திட்டத்தில் கொண்டு வருவது செத்தாலும் தூக்கிப் போடநாங்கள் தானே வேண்டும் என்று
ஒட்டு மொத்தமாக அடிமைப் படுத்தியது.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

அவனை வாழ விட்டார்களா?இல்லைஅவனைத்தான் உணரவிட்டார்களா?
அவன் சுய அறிவை முடக்கி ஊர் அறிவை ஏற்றி ஜனன மரண காலத்தையே ஏப்பம் விட்டு விட்டார்கள்.பாவம் யாருக்கு?முதலில் தன்னை உணராமல் அடங்கிப் போறவனுக்கே கர்மா
ஆரம்பமாகும்.

அவனை இயங்கவிடாமல் தடுத்தக் குற்றம் மற்றோருக்கு.உலகே இந்த போக்கில்தானே போகிறது
என்றால் இதிலிருந்து தான் மாற்றம் வேண்டும் மாற்றிப் பிறக்க வைக்க வேண்டும்.
பிறந்ததும் குருமூலம் அறிந்து பெயர் இடுவதுவரை அவன் உள் உணர்வைத் தூண்டி
ஞான வழியில் நடத்துவது வரை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க : கும்பகோணம் பற்றிய அறிய ரகசியங்கள்

குருவை உணர்ந்து தன்னை அறிந்து கொண்டு வாழும்போது அவன் வாழ்வை அவன்
அனுபவிக்க முடியும். அறிமுகம் உன் ஆவணத்தைப் பார்த்து உனக்கு அறிமுகப்படுத்துவதே.
அதுதான் அதிசயம். உன் சுதந்திரத்தை யாரும் பங்கு போடாமல் படைப்பின் இரகசியத்தை
உணரவைப்பது.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை. படைப்பில் சார்பு தன்மை என்பது அடிமைத்தன மல்ல
இயல்பு தனம் இணைப்புத்தனம்.பஞ்ச பூத கோர்வை நீஅதற்காகபஞ்சபூதத்திற்கே அடிமை அல்ல.

நீயும் பஞ்சபூதமே பஞ்ச பூதம் இல்லை என்றால் நீ இல்லை.இருக்கிற அறிவில் சிந்தி குரு அறிவில் பயணி இறை அறிவைத் தொட்டுவிடலாம்.

வாழ்வியல்

நாம் கேட்கும் வார்த்தைகள் நமக்கு சொல்வது பாடங்களை நாம் கற்று கொள்வதும் கடந்து போவது அவரவர் விருப்பங்கள், இந்த உலகில் கற்றலின் கேட்டாலே நன்று என்று சொன்னதின் விளக்கம் நமது அனுபவத்தின் வெளிப்பாடுகளை உணரவே கொடுக்கப்பட்ட உணர்வுகள்

நம்மில் உணரும் தன்மைகளை பொறுத்தே நமது அறிமுகங்கள் நமக்கு அதிசயமாக மாறும்
ஒரு மனிதனின் மிக பெரிய பொக்கிஷம் என்றால் என்னை பொறுத்த வரை அவனது அறிமுகத்தின் வழியாக அவனுக்கு கிடைத்த நல்ல நண்பர்கள்.

தேர்ந்தெடு உனக்கான உலகம் மிக பெரிது,உனக்கான மனிதர்களை இந்த பிரபஞ்சம் படைத்தது வெகு நாட்கள் ஆகிறது உன்னால் கண்டுபுடிக்க பல வருட அனுபவங்கள் உனக்கு தேவை,தேர்வுகள் உனக்கானது முடிவுகள் பிரபஞ்சத்தின் கையில் .

உரக்கமாக அழைத்து பார் உன் வார்த்தைக்கும் இந்த பிரபஞ்சம் பதில் சொல்லும் உன்னை போல் தேடுதலோடு உள்ள நபர்களை அறிமுகம் செய்யும் , பயணப்படு உனக்கான வழியினை உன்னால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

ஒரு அறிமுகம் ஒருவனின் வாழ்வை மாற்றும், பழக்கத்தை மாற்றும் , பண்பினை மாற்றும் ,உணர்வுகளை மாற்றும் ,உண்மையாய் உணர்த்தும் , உனக்கான தேடலுக்கு விடை கொடுக்கும் .
உன் உணர்வுகளை மதிக்க தெரிந்த அறிமுகம் கிடைக்க நீ உன்னை இழந்த பின்னால் மட்டுமே பெற முடியும் , அப்பொழுது தான் அந்த அறிமுகத்தின் அற்புதத்தை உன்னால் உணர முடியும் .

உன்னை உணர வைக்கும் அறிமுகம்

உன் நண்பன் யார் என்று சொல் உன்னை பற்றி சொல்கிறேன் இது ஒரு திரை பட வசனம் , ஆனால் இந்த வார்த்தையின் உண்மை இன்னும் பல மனிதர்களுக்கு புரிய வில்லை.

உன்னை உணர வைக்கவும் , உன்னை மாற்றவும் , உன்னை விட உன் மனதை விட , உன் நண்பனின் மனதிற்கு மனது கட்டு படும் ,இது எல்லோருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்கும் உண்மை, யார் உணர்ந்து கொண்டு உள்ளனர் ஒரு சிலரே, உன்னை படைத்த படைப்பாளிக்கு தெரியும் நீ எங்கே ஏமாற வேண்டும் , நீ எங்கே அவமான பட வேண்டும் , நீ எங்கே உயர்த்த பட வேண்டும் என்று , நான் என்ற அகங்காரம் விட்டு என்னை கருவியாக்கி என்னுள் பல உணர்வுகளை கொடுத்து என்னை உருவாக்கி கொண்டு இருக்கும் இந்த பிரபஞ்ச பஞ்ச பூத சக்திக்கு கட்டுப்படு.

உன் உயர்வை உன்னால் உணர முடியும் , உன்னால் பலரையும் உயர்த்த முடியும் .

அறிமுகம் நமக்கு கிடைத்த அதிசயம்

மேலும் படிக்க : உணர்வு வெளிப்பாட்டின் விளைவுகளும் தீர்வுகளும்

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply