ஆன்மீகத்தின் உணர்வும் அறிவியலின் உணர்வும்

எதையும் உங்களால் உள்வாங்க முடியும், எதையும் உங்களால் உணர முடியும். தீவிரம் நிலையானதாக இருந்தால் அதுவே விடுதலையை நிகழ்த்தும். ஆன்மீகம் என்பது அமைதியைத் தேடுவதற்கு அல்ல, அது உங்கள் உச்சத்தைத் தொடுவதற்கு!

ஆன்மீகம் என்றால் என்ன

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

மேலும் படிக்க : சந்திர தசா யாருக்கு யோகம் அவயோகம்

இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.நல்வாழ்வு வாழ இவை அனைத்தும் ஒரு ஐதீகம்.

ஆன்மீக உணர்வு என்றால் என்ன

தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு செயலை செய்யும் போதும் ‘நான்’ என்னும் உணர்வு ஆழ்மனதில் நன்கு பதிந்திருப்ப-தால் நமது இருப்பை மட்டுமே நம்மால் உணர முடிகிறது. நமது ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றின் மூலம் இவ்வாறு நாம் உணர்கிறோம். அதன்படியே எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன; நாம் பெறக்கூடிய அனுபவங்களும் இதற்கேற்றவாரே கிடைக்கின்றன. ஆன்மீக மொழியில் இதுவே ‘ஜீவபோதம்’ எனப்படுகிறது. இதற்கு மாறாக நம்முள் குடிகொண்டிருக்கும் ஆத்மாவை அல்லது இறைவனை ‘பரபோதம்’ என குறிப்பிடுகிறோம்.

நாம் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு அனைத்திற்கும் மேலான ஒரு சக்தி நம் வாழ்வை நடத்துவிக்கிறது என்பதை உணரத் துவங்குகிறோம். நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய அடைய நமக்கு உள்ளும் புறமும் இறைவனின் இருப்பை அதிகமாக உணரத் துவங்குகிறோம். பரபோதம் (ப) அதிகமாக அதிகமாக நமது ஜீவபோதம் (ஜீ) குறையத் துவங்குகிறது.

மேலும் படிக்க : பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்

ஒருவரது வாழ்வில் தீவிரமாக இறைவனின் அல்லது குருவின் (இறைவனின் கற்பிக்கும் தத்துவம்) இருப்பை உணரும்போது ஜீவபோதத்தின் இடத்தை ஆன்மீக உணர்வு இட்டு நிரப்புகிறது. அன்றாட அலுவல்களை நிறைவேற்றும்போது இறைவன் அல்லது குருவின் இருப்பை எந்த உருவத்திலாவது தீவிரமாக உணர்வது மற்றும் இவ்வுணர்வை பின்புலமாக வைத்து வாழ்வை அனுபவிப்பது ஆகியவையே இறைவனிடம் அல்லது குருவிடம் கொண்ட ஆன்மீக உணர்வு எனப்படுகிறது.

ஒருவர் இம்மாதிரியான ஆன்மீக உணர்வில் திளைத்திருக்கும்போது அந்த குறிப்பிட்ட கால அளவிற்கு அவரது ஆழ்மனம் இறைவனுடன் ஒன்றியிருக்கிறது. அந்த நிலையில் அவரது மனமும் புத்தியும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவதால் அந்த நபர் இறைவனின் தொடர்பை அதிக அளவு உணர முடிகிறது. எனவே இந்த நிலையில் மனிதனுக்கு இறைவனை பற்றியோ ஆன்மீகத்தை பற்றியோ எந்தவித ஐயமும் எழுவதில்லை.

ஆன்மீக உணர்வு எனும் நிலை குருக்ருபாயோகத்தின் மூலமும் பக்தியோகத்தின் மூலமும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் அனுபவமாகும்.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

ஆன்மீக உணர்வின் வகைகள்

அசைவற்று இருத்தல்
வேர்த்தல்
மயிர்கூச்செறிதல்
குரல் நடுக்கம்
நடுக்கம்
வெளிறிப் போதல்
கண்ணீர் பெருகுதல்
மயக்கமடைதல்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து உணர்வுகளும் ஒரு மனிதனின் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

ஆரத்தி செய்யும்போது அல்லது குரு அல்லது கடவுளை நினைவு கூறும்போது அல்லது அவர்கள் சம்பந்தமாக சில சம்பவங்களை நினைவு கூறும்போது சில ஸாதகர்களுக்கு கண்களில் கண்ணீர் பெருகும் அனுபவம் ஏற்படுகிறது. எட்டு வித ஆன்மீக உணர்வுகளில் இது ஆஸ்ருபாத் ஆகும். எட்டு வித ஆன்மீக உணர்வும் ஒருசேர ஏற்படும்போது அஷ்ட ஸாத்வீக உணர்வு விழிப்படைந்துள்ளது என்று அர்த்தம்.

மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்

அறிவியல் என்றால் என்ன

அறிவு சார்ந்த அல்லது அறிவை மேம்படுத்துகிற கல்வியே (அறிவு + இயல் ) அறிவியல் என்று கூறலாம்.

ஒரு பொருள் அல்லது செய்தியை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில்,ஆழமாக, ஆராய்ந்து பரீட்சித்து பார்த்து முடிவு செய்தாகும்.

அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்ததாகும். ஒரு நிகழ்வை அல்லது செய்தியை எப்பொழுது அதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கற்றுக்கொள்கிறோமோ அப்போழுது அறிவியல் தென்படும்.

மனிதன் தான் நினைத்ததை, உணர்ந்ததை சுவரில் வரைய செதுக்க என்று தொடங்கினானோ அன்றே அறிவியல் பிறந்து விட்டது. நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும், இயற்கையின் மாறுபாடுகளையும், வானத்தின் இருக்கும் கோள்களின் பாதைகளை அளவிடுவதையும் நமது முன்னோர்கள் காலம் காலமாக கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் அறிவியல் சார்ந்ததுதான்.

ஆனால் கலீலியோவிற்குப் பின் 17ம் நூற்றாண்டில் உருப் பெற்ற தற்கால அறிவியல் தனக்கென்று சில வரைமுறைகளைக் கொன்டிருக்கிறது. அவற்றை வைத்துத்தான் நமது அணுகுமுறை அறிவியல் பூர்வமானதா இல்லையா என்பதைக் கணக்கிட முடியும்.

அறிவியல் உணர்வு என்றால் என்ன

சாதாரண நனவைப் போலல்லாமல், தத்துவார்த்த விஞ்ஞானம் ஒரு உயர்ந்த வடிவமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது நிகழ்வுகள் மற்றும் பொருள்களுக்கு இடையில் உள்ள இணைப்புகள் மற்றும் வடிவங்களை ஒரு சான்று அடிப்படையிலான முறையில், மிகத் துல்லியத்துடன் விவரிக்கிறது.

விஞ்ஞான நனவு அதன் அணுகுமுறையின் கண்டிப்பில் சாதாரணத்திலிருந்து வேறுபடுகிறது, அதே போல் அது அடிப்படையாகக் கொண்ட பூர்வாங்க அடிப்படை அறிவியல் அறிவை நம்பியுள்ளது. தத்துவார்த்த மற்றும் அன்றாட உணர்வு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன. இரண்டாவது இனத்தைப் பொறுத்தவரை முதல் இனம் இரண்டாம் நிலை, ஆனால் அதை மாற்றுகிறது.

பல்வேறு நிலைகளில் நிலையான ஸ்டீரியோடைப்கள் மற்றும் அன்றாட நனவின் வடிவங்கள் இறுதி நிலைக்கு உண்மையாக இருக்க முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும், ஏனெனில் அவை அனுபவ மட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவை. இந்த மட்டத்தில், புரிந்துகொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் சமூக மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் மாயைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், அன்றாட உணர்வு இல்லாமல் அன்றாட வாழ்க்கை சாத்தியமற்றது.

கோட்பாட்டு விஞ்ஞான உணர்வு, அதன் தனித்தன்மையின் காரணமாக பாரியதாக இருக்க முடியாது, இது ஒரு நடைமுறை மற்றும் பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமே தொடர்ந்து இயங்குகிறது, இது உலகளாவிய மனித உயர் வடிவ கலாச்சாரத்தை ஒழுங்கமைப்பதற்கு இயற்கையானது.

ஆன்மீக உணர்வும் அறிவியல் உணர்வும்

பொதுவாக எது விஞ்ஞானம், எது ஆன்மீகம் என்று பார்க்கப்போனால். இதன் பொருள், எதைப் பற்றி நீங்கள் ஆய்வு செய்கிறீர்கள், எதை ஆய்விற்கு உட்படுத்துகிறீர்கள் என்கின்ற கண்ணிற்குத் தெரிகின்ற அல்லது விஞ்ஞான பூர்வமான கருவிகளால் உணரப்படுகின்ற பொருட்களாகவே இருக்கக்கூடியதில்தான் விஞ்ஞானம் செல்கிறது. ஆனால், ஆன்மீகம் என்று பார்த்தால், கண்களாலோ, ஐம்புலன்காளலோ அல்லது திரிகரணங்களாலோ உணரப்பட முடியாமல் இருக்கக்கூடிய ஒரு தன்மை.

மற்றவரிடம் காரணப்பூர்வமாக புரியவைக்க முடியாது. எப்படி விஞ்ஞானத்தில் இதயம் துடிக்கிறது, மூளையில் ஒருவிதமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்கிறீர்கள். ஆனால், சப்ஜெக்டிவாக இதுபோன்று ஏற்படக்கூடிய அனுபவம், உள்ளூர மனிதன் உணருகின்ற, நீங்கள் சொல்கின்ற ஆத்மார்த்தமான அந்த அனுபவம் வெளியில் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. நீங்கள் கான்ஷியஸ்னஸ் என்று ஒரு வார்த்தையை உபயோகப் படுத்தினீர்கள். நீங்கள் விஞ்ஞானத்தில் அவருக்கு கான்ஷியஸ் இருக்கிறதா என்று உணர்ச்சி என்கின்ற அடிப்படையில் சொல்கிறீர்கள்.

ஆன்மீகத்தில் அதையே உணர்வு என்கின்ற பெருநிலையில் சொல்கிறார்கள். அதிலும் பல்வேறுபட்ட நிலையிலான உணர்வு என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், எந்த இடத்தில் நீங்கள் சொல்லக்கூடிய கான்ஷியஸ்னஸ் விஞ்ஞான அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. எந்த அடிப்படையில் ஆன்மீகத்தில் சொல்லப்படக்கூடிய கான்ஷியஸ்னஸ் இந்த இடத்தில் பொருளாகிறது என்பதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் .

எனவே ஆன்மீகமும் அறிவியலும் நம்முள் கலந்தால் நமது வாழ்வின் எல்லா விதமான அறிவியல் வளர்ச்சியையும் நம்மால் உணர்ந்து ஆன்மீக புரிதலோடு நமது வாழ்வினை வாழமுடியும் .

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply