யோகா செய்வதால் வரும் நன்மைகள் ..!
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் :
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் செய்வதால் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளை பலப்படுத்த செய்கிறது. இது கால்களின் பின்புறத்தையும் நீட்டி சம நிலையை மேம்படுத்துகிறது.
சசங்காசனம் :
கைகள், தோள்கள் மற்றும் மேல் முதுகில் நீட்டவும் பலப்படுத்தவும் சசகசனா உதவுகிறது. இந்த ஆசனத்தை வழக்கமாக செய்து வந்தால் பல முதுகெலும்பு சிக்கல்களைத் தணிக்க முடியும்.
சர்வங்காசனா யோகாசனம் :
இந்த சர்வங்காசனா ஆசனம் செய்வதால் தைராய்டு பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இந்த ஆசனத்தினால் இதயத்திற்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் மென்மையான இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. இதனால் இதயத்தின் இரத்த ஓட்டமானது சரியான செயல்பாட்டுடன் இருக்கும். குறிப்பாக இதயத்தில் படபடப்பு தன்மை ஏற்படாமல் பாதுகாக்கும்.
விராபத்ராசனா :
விராபத்ராசனா யோகாசனம் கவனம், சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செய்வதால் உடலில் நல்ல சுழற்சி மற்றும் சுவாசத்தை ஊக்குவிக்க செய்யும். மேலும் இதன் விளைவாக உடல் முழுவதையும் உற்சாகபடுத்தும்.
மகரசனா :
மகரசனா யோகாசனம் ஆஸ்துமா, முழங்கால் வலி மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து வித பிரச்சினையையும் குணப்படுத்தும். இந்த ஆசனம் slip disc, spondylitis, and sciatica போன்ற உடலுறுப்புகளை குணப்படுத்த உதவுகிறது. இந்த மகரசனா ஆசனம் உடலை தளர்த்தி எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
உத்தன்படசனா யோகா :
இந்த உத்தன்படசனா ஆசனம் உடலில் உள்ள செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செரிமான உறுப்புகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் சிறப்பு கணையம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
தடாசனா யோகா :
தடாசனா யோகா செய்வதால் தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை பலப்படுத்துகிறது. அதோடு இடுப்பு, கால் பாதங்களுக்கு வலிமையை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் இந்த தடாசனா ஆசனம்.
திரிகோனசனா யோகா :
திரிகோனசனா யோகா உடலில் அஜீரண பகுதியை குணப்படுத்தும். குறிப்பாக இடுப்பு, தொடை பகுதிக்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் தொடைகளில் இருக்கும் கொழுப்புகளை நீக்கிவிடும். சிறுநீரக செயல்பாட்டை அதிகமாக தூண்ட செய்யும்.
கோமுகசனா யோகா :
கோமுகசனா ஆசனம் சிறுநீரக பகுதியை தூண்ட செய்யும். அதுமட்டும் இல்லாமல் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை நீக்கும் தன்மை இந்த கோமுகசனா ஆசனத்திற்கு உள்ளது.
பவனமுக்தாசனா யோகா :
பாவனமுக்தாசனா ஆசனம் செய்வதால் வயிற்று தசைகளை வலுப்படுத்தும். செரிமான பகுதிகள் மற்றும் குடல் உறுப்புகளை மசாஜ் செய்யும் ஆற்றல் வாய்ந்தது பாவனமுக்தாசனா. அதோடு வாய்வு பிரச்சனை இல்லாமல் செரிமான பகுதியை மேம்படுத்துகிறது.
சுகாஸனா யோகா :
இந்த ஆசனம் காலர்போன்கள் மற்றும் மார்பு பகுதிகளை விரிவுபடுத்தக்கூடிய சிறந்த ஆசனம். முக்கியமாக இந்த சுகாஸனா யோகாசனம் மனதை அமைதி நிலைபடுத்தவும் மனதை மேம்படுத்தவும் செய்கிறது.
மேலும் படிக்க : தியானத்துடன் உங்கள் காலைப் பொழுதை குதித்தெழுந்து துவக்குங்கள்
மனநிலை மாற்றங்கள் :
யோகா செய்வது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. செரோடோனின் என்பது மனநிலை, கவனம், தூக்கம், வலி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். தினசரி யோகா மற்றும் தியானம் செய்வது செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து, நேர்மறையான மனநிலை மாற்றங்களை உணரலாம்.
நமது எண்ணத்தின் இயல்பு, மனித சுபாவம், நம்முடன் ஒன்றி வாழும் உணர்ச்சிகள், நம் நடத்தை போன்ற காரணங்களினால் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். இதனை திறம்பட சமாளித்து செயல்பட யோகா உதவுகிறது.
பின்வரும் ஐந்து வழிகளில் யோகா நம் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது…
பதட்டத்தை குறைக்கலாம் :
பதட்ட உணர்வு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பரிந்துரை செய்யப்படுகிறது. யோகாவின் தோரணை மற்றும் சுவாசிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நம் மனதில் தோன்றும் எதிர்மறையான மன உரையாடலை தடுக்கலாம். யோகா செய்வது கவலை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
பதட்ட உணர்வில் இருந்து மீள்வதற்காக யோகா பயிற்சி செய்யும்போது கவனிச்சிதறல் ஏற்பட்டாலோ அல்லது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலோ கவலைப்பட வேண்டாம். மெதுவாக கவனச் சிதறலை குறைத்து, மனதினை ஓர் நிலைப்படுத்தி யோகா செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்களை நீங்களே காதலிப்பீர்கள் :
யோகா செய்வதன் மூலம் உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டாகிறது. உங்களைப் பற்றிய புரிதல் சிறப்பாக இருக்கும், உங்களுக்காக நேரம் ஒதுக்க தொடங்குவீர்கள். உங்களுக்கான சுய பராமரிப்பு முறைகளில் யோகவையும் தவறாமல் செய்ய முயற்சி செய்வீர்கள். உங்கள் உடல் திறனில் தன்னம்பிக்கை உருவாகும். இது உங்கள் சுயமரியாதையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், உடற்பயிற்சியின் போது வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
உறவுகளை மேம்படுத்துகிறது :
தினசரி யோகா செய்வது உங்கள் சமூக உறவுகளை பலப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் நீங்கள் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அன்பின் வெளிப்பாடும் அதிகமாகும். மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை தவிர்த்து, நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது :
நம்மை பற்றிய ஒரு சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பிடிக்காது என்ற எண்ணம் இருக்கலாம். இதனுடன் ஒரு சில திறமைகளை வெளி உலகிற்கு காட்டுவதில் தயக்கம் இருக்கலாம். இது நிராகரிக்கப்படுமோ, மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்ற அச்சத்தில் நிறைய விஷயங்களை மனதுக்குள் மறைத்து வைக்கிறோம். நீங்கள் மறந்த உங்களின் ஒரு சில சிறந்த குணங்களை யோகா நினைவில் கொண்டு வரும். இது உங்களைப் பற்றிய சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
என்றும் அன்புடன் :
S.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…