12 லக்கின பாவக பலன்கள்

12 லக்கினபாவக பலன்கள்


முன்னுரை :

அன்புள்ள வாசகர்களே,

12 லக்கினபாவக பலன்கள் என்னும் தலைப்பின் மூலம் உங்களை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சி யடைகிறேன். என்னுடைய கட்டுரை ஒவ்வொன்றும் வாசகர்களாகிய உங்களுக்கு புதிய வழிமுறைகளைக் காட்டும். அதேபோன்று இந்த கட்டுரைக்கு பேராதரவு காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

12 லக்கினங்களைப் பற்றி பல்வேறு கட்டுரைகளில் பல விஷயங்களை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் கட்டுரைகளில் பல புதிய விஷயங்களை அறிய உள்ளீர்கள் ஒவ்வொரு லக்கினத்துக்கும் தனிப்பட்ட விசேஷமான விஷயங்களை அளித்துள்ளதால், உங்கள் ஜோதிட ஞானத்தை மேலும் நீங்கள் விரிவாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும். பல மூல கட்டுரைகளில் கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளதுடன், அனுபவப் பூர்வமான விஷயங்களையும் இணைத்துள்ளதால் இது உங்களுக்கு மிக்க பயனுள்ள நூலாகும்.

படித்து பயன் பெறுவதுடன் உங்கள் கருத்துக் கனை எனக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பொருளடக்கம்

12 லக்ன பாவ பலன்கள் 7

1.மேஷம்

2. ரிஷபம்

3.மிதுனம்

4. கடகம்

5. சிம்மம்

6.கன்னி

7. துலாம்

8. விருச்சிகம்

9. தனுசு

10. மகரம்

11.கும்பம்

12.மீனம்

12 லக்கின பாவக பலன்கள்

எல்லையில்லாத இந்த பிரபஞ்சக் கோளத்தில் (Zodiac) ஜோடியாக் என்ற நட்சத்திர மண்டலம் 360 டிகிரி கொண்டதாக உள்ளது. இந்த 360 டிகிரி வட்டத்தை 12 சம பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றும் 30 டிகிரி (அ) பாகை கொண்ட 12 ராசிகளாகப் பிரித்து (1) மேஷம், (2) ரிஷபம், (3) மிதுனம், (4) கடகம். (5) சிம்மம், (6) கன்னி, (7) துலாம், (8) விருச்சிகம், (9) தனுசு, (10) மகரம், (11) கும்பம், (12) மீனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 12 ராசிகளும் ஜோதிட சாஸ்திரத்தின் 12 படிக்கற்களாகும். இந்த 12 ராசிகளும்தான் மனித ஜீவனின் வாழ்க்கை நிலையைக் காட்டும் காலக் கண்ணாடியாக செயல்படுகின்றது. நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களும் இந்த 12 ராசிகளில் நின்று பல செயல்பாடுகளை நிகழ்த்துகின்றன. அந்த அற்புதமான செயல்பாடுகளையெல்லாம் முழுமையாக நாம் அறிந்து கொள்வதென்பது இயலாத காரியமே! அதற்கு நம் வாழ்நாள் போதாது என்று கூறினால் அது மிகையானதல்ல!

18 மகரிஷிகள் எழுதி, பல மகான்களால் விவரிக்கப்பட்டுள்ள இந்த ஜோதிட சாஸ்திரத்தை முழுமையாக அறிந்து கொள்வதென்பது முடியக்கூடிய காரியம்தானா? ஏதோ ஓரளவு அறிந்து கொள்ளலாம். அந்த ஓரளவு என்பதே ஒரு ஜீவனின் வாழ்வில் ஏற்படும் பல செயல் பாடுகளை அறிந்து கொள்ள உதவுகின்றது. எனினும் மனித மனம் மேலும் மேலும் பல விஷயங்களை அறிந்துகொள்ள ஆசைப் படுகின்றது. நம் வாழ்நாளில் முடிந்தவரை அறிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்தில் பல நூல்களை படிக்கத் தோன்றுகிறது. படிக்கும் பல பயனுள்ள விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளவும் முயற்சிக்கின்றது.

 

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளின் குணங்கள், தன்மை மற்றும் அவற்றில் 9 கிரகங்களும் இணைந்து நிகழ்த்தும் செயல்பாடுகளைப் பற்றியும் இங்கு காணப்போகின்றோம். முதலில் ராசி என்பதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டால்தான் ஜோதிட சாம்ராஜ்யத்தில் நாம் காலடி எடுத்து வைக்க ஏதுவாக இருக்கும். ராசியின் விவரங்களை அறிந்துகொள்ளும் முன்பாக ராசிச் சக்கரங் களின் அமைப்பைப் பற்றி அறிந்துகொள்வது சிறப்பாக இருக்கு மென்று கருதுகின்றேன்.

மேலும் படிக்க : ஜோதிடம் என்பது என்ன?

1.மேஷம்

 

சர ராசி என்றும், ஓஜை ராசி என்றும் அழைக்கப்படும் மேஷம் ஆண் ராசியாகும். நெருப்பின் ஆதிபத்தியம் பெற்ற முதல் ராசியான இது உடல் உறுப்பில் தலையைக் குறிக்கும். இதன் ஆட்சியாளர் எரிகிரகம் எனும் செவ்வாய். மற்றொரு எரிகிரகம் (அ) நெருப்புக் கிரகம் எனும் சூரியன் இந்த ராசியில் உச்சம் பெறுகின்றார். சனி இந்த ராசியில் நீசமடைகின்றார்.குரு ஒருவரே இந்த ராசியில் நட்பு பெறுபவர். சந்திரன், சுக்கிரன், புதன் மூவரும் சமம் பெறுகின்றனர். ராகு, கேது இருவரும் பகை பெறுகின்றார்கள்.

2. ரிஷபம்

 

இனி ரிஷப லக்கினத்தைப் பற்றிக் காணலாம். ஸ்திர ராசி என்றும், உக்கும் ராசி – பெண் ராசி – இரட்டைப் படை ராசி என்றழைக்கப்படும் இரண்டாம் ராசியான இது முகத்தைக் குறிக்கும். இதன் ஆட்சியாளர் நீர்க்கிரகம் எனப்படும் சுக்கிரனாகும். மற்றொரு குளுமையான நீர்க் கிரகமான சந்திரன் இந்த ராசியில் உச்சம் பெறுகின்றார். நன்கு கவனியுங்கள். மேஷத்தில் இரு எரி கிரகங்களாகிய சூரியன் உச்சம் பெற, செவ்வாய், ஆட்சி யாளராகின்றார். ரிஷபத்தில் இரு நீர்க் கிரகங்களாகிய சந்திரன் உச்சம் பெற, சுக்கிரன் ஆட்சியாளராகின்றார். எவ்வளவு பொருத்தமாக நம் முன்னோர்கள் முதலிரண்டு ராசியை அமைத்துள்ளார்கள்.

3.மிதுனம்

 

இனி மிதுன லக்கினத்தைப் பற்றிக் காணலாம். உபய ராசி ஒஜை ராசி ஆண் ராசி -சௌமிய ராசி ஒற்றைப்படை ராசி என்று அழைக்கப் படும். 3- வது ராசியான இது மார்பு ஸ்தானத்தைக் குறிக்கும். இதன் ஆட்சி யாளர் காற்றுக் கிரகம் என்றழைக்கப் படும் புதனாகும். இந்த ராசியில் எந்தக் கிரகமும். உச்சமோ, நீசமோ, மூலத்திரி கோணமோ அடைவதில்லை. சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் நட்பு பெறுகின்றார்கள். சந்திரனின் மகனான புதன் சந்திரனை பகையாக எண்ணுவார். ஆனால் சந்திரன் தன் மகனான புதனை பகையாக எண்ணுவதில்லை. எனவே சந்திரனும் மிதுனத்தில் நட்பு எனும் நிலையையே பெறுகின்றார்.

4. கடகம்

 

அடுத்து கடகத்தைப் பற்றிக் காணலாம். சர ராசி, உக்கும ராசி, பெண் ராசி, சௌமிய ராசி, இரட்டைப் படை ராசி என்றெல்லாம் அழைக்கப்படும் 4-வது ராசியான கடகம் இருதயத்தைப் பற்றி குறிக்கும். இதன் ஆட்சியாளர் குளுமையான நீர்க்கிரகமான சந்திரன் சந்திரனுக்கு ஆட்சி எனும் சொந்த வீடு கடகம் மட்டும்தான். இந்த ராசியில் குரு உச்சமடைகின்றார். செவ்வாய் நீசமடை கின்றார். சூரியன் நட்பு பெறுகின்றார். புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஐவரும் இந்த ராசியில் பகை பெறுகின் றார்கள். இதில் சமம் என்ற நிலையை எவரும் பெறுவதில்லை.

5. சிம்மம்

 

ஸ்திர ராசி, ஓஜை ராசி, ஆண் ராசி, குரூர ராசி, (பாப ராசி) ஒற்றைப் படை ராசி என்று அழைக்கப்படும் 5-வது ராசியான சிம்மம் விலா (அ) மேல் வயிறு என்னும் பாகத்தைக் குறிக்கும். இதன் ஆட்சியாளர், கிரகங்களின் தலைவ ராகவும், கிரகங்களை தன் ஈர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்துபவரும், பிரபஞ்சத்துக்கே ஒளி அளிக்கும் கிரகமான சூரியனாகும். சூரியனுக்கு சிம்மம் மட்டும்தான் ஆட்சி வீடு என்பதுடன் அவர் மூலத்திரிகோண பலம் பெறுவதும் சிம்மத்திலேதான். சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் சிம்மத்தில் நட்பு எனும் நிலையைப் பெறுகின்றார்கள். புதன் நட்பு என்ற நிலையையும், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் பகை என்ற நிலையையும் பெறுகின்றார்கள். சிம்மத்தில் எக்கிரகமும் உச்சமோ, நீசமோ அடைவ தில்லை. எனவே எப்போதும் ஒரே சீரான பலனை அளிக்கும் ராசி என்று சிம்மத்தைப் பற்றி கூறுவதுண்டு.

6.கன்னி

உபய ராசி, உக்கும ராசி, பெண் ராசி,சௌமிய ராசி, (சுபராசி) இரட்டைப் படை ராசி என்றழைக்கப்படும் 6 – வது ராசியான கன்னி இரைப்பை, சிறுகுடல் ஆகிய பாகத்தைக் குறிக்கும். தொப்புள் (அ), இடுப்புப் பகுதி என்றும் குறிப்பிடப் படுவதுண்டு. இதன் ஆட்சியாளர் புதன், கன்னியில் புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரி கோணம் ஆகிய மூன்று வலிமைகளைப் பெறுகின்றார். வேறு எவருக்கும் ஒரே வீட்டில் இம்மாதிரி மூன்று பலங்களைப் பெறும் அமைப்பு இல்லை. இந்த அமைப்பு கன்னி புதனுக்கு மட்டும்தான் உண்டு. இந்த ராசியில் சூரியன்சமம் என்ற நிலையையும்; சந்திரன், சனி, ராகு, கேது ஆகிய நால் வரும் நட்பு என்ற நிலையையும்; செவ்வாய், குரு இருவரும் பகை என்ற நிலையையும்; சுக்கிரன் நீசம் என்ற நிலையையும் பெறு கின்றார்கள்.

7. துலாம்

 

சர ராசி, ஒஜை ராசி,ஆண் ராசி, சுப ராசி (சௌமிய ராசி) ஒற்றைப்படை ராசி என்றழைக்கப்படும் 7-வது ராசியான துலாம் அடிவயிறு, பெருங்குடல் ஆகிய பகுதிகளைப் பற்றி குறிப்பிடும். இதன் ஆட்சியாளர் சுக்கிரன். சனி இந்த ராசியில் உச்சம் பெறுகின்றார். சூரியன் நீசமாகின்றார். புதன், ராகு, கேது ஆகியவர்கள் நட்பு நிலையையும்,குரு பகை என்ற நிலை யையும், சந்திரன், செவ்வாய் இருவரும் சமம் என்ற நிலையையும் பெறுகின்றார்கள்.

புதன், சனி இருவரும் துலாத்துக்கு சுபராகின்றார்கள். சனி முழு யோகராகவும், புதன் அரை யோகராகவும் செயல்படு. வார்கள். சூரியன், குரு இருவரும் பகைவர் களாகவும், ராகு, கேது இருவரும் நண்பர் களாகவும், சந்திரன், செவ்வாய் இருவரும் சமமானவர்கள் என்ற நிலையைப் பெறு கின்றார்கள். சுக்கிரன் மூலத்திரிகோணம் அடையும் ராசி.

8. விருச்சிகம்

ஸ்திர ராசி,உக்கும ராசி, பெண் ராசி, பாப ராசி, இரட்டைப் படை ராசி என்றழைக்கப்படும் 8-வது ராசியான விருச்சிகம் பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பகுதிகளை பற்றிக் குறிப்பிடும். இதன் ஆட்சியாளர் செவ்வாய். ராகு, கேது இருவரும் இந்த ராசியில் உச்சம் பெறு பவர்கள்.சந்திரன் இந்த ராசியில் நீசம் பெறுகின்றார்.

9. தனுசு

 

உபய ராசி,ஓஜை ராசி, ஆண் ராசி, சௌம்ய (சுப) ராசி, ஒற்றைப்படை ராசி என்று வழங்கப்படும் 9-வது ராசியான தனுசு ஓர் உயர்ந்த ராசியாகும். முழுச் சுபர் எனப்படும் குருவை ஆட்சியாளராகக் கொண்ட இந்த ராசி, குதம் எனும் உட்காரும் பகுதியைப் பற்றி குறிப்பிடும். ஆட்சியாளரான குரு இந்த ராசியில் மூலத்திரிகோண வலிமையையும் பெறு கின்றார். இந்த ராசியில் எந்தக் கிரகமும் பகையோ, நீசமோ பெறுவதில்லை என்பது இந்த ராசிக்கு உள்ள விசேஷ சிறப்பாகும்.

10. மகரம்

 

சர ராசி, உக்கும ராசி, பெண் ராசி, குரூர (பாப ராசி) ராசி, இரட்டைப்படை ராசி என்றழைக்கப்படும் 10-வது ராசியான மகரம் 12 ராசிகளிலும் தனிச் சிறப்பைக் கொண்டது. முழு பாபர் என்றழைக்கப் படும் சனியின் ஆட்சி வீடாக மகரம் இருந்தாலும் இது புனிதமான ராசி என்றழைக்கப்படுகிறது. சர ராசிகளில் கடகத்துக்கு அடுத்தபடியான இடத்தைப் பெற்றாலும் கடகத்துக்கு இணையாகவும், இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேலான ஒரு சிறப்பையும் பெற்றுள்ள ராசி.

11.கும்பம்

 

ஸ்திர ராசி,ஓஜை ராசி, ஆண் ராசி, குரூர (பாப) ராசி, ஒற்றைப் படை ராசி என்றழைக்கப்படும். 11-வது ராசியான கும்பம், ஸ்திர ராசிகளிலேயே கடைசியாக நிற்பது. மாதங்களில் மாசி மாதத்தைக் குறிக்கும். இந்த மாதத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது மாசி மகம் எனும் திருவிழா 12 வருடங்களுக்கு ஒரு முறை குரு சிம்ம ராசியில் இருக்கும்போது மகம் நட் சத்திரத்தில் கும்பகோணத்தில் நடைபெறும்.

12.மீனம்

 

உபய ராசி,உக்கும ராசி,பெண் ராசி, சௌம்ய (சுப) ராசி, இரட்டைப் படை ராசி என்றெல்லாம் அழைக்கப் படும் 12- வது கடைசி ராசியான மீனம் முழுச் சுபர் எனப்படும். குருவை ஆட்சியாளராகக் கொண்ட இந்த ராசி பாதம் என்ற பகுதியைப் பற்றிக் குறிப்பிடும். இந்த ராசியில் எந்தக் கிரகமும் பகை பெறுவதில்லை என்பது இந்த ராசியின் சிறப்பாகும். சூரியன், செவ்வாய் இருவரும் இந்த ராசியில் நட்பு என்ற நிலையையும்,சந்திரன், சனி இருவரும் சமம் என்ற நிலையையும், ராகு, கேது இருவரும் நட்பு நிலையையும், சுக்கிரன் உச்சம் பெறும் நிலையையும், புதன் நீசம் என்ற நிலையையும் பெறு கின்றார்கள்.

என்றும் அன்புடன் :
S.சுதாகரன்

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply