யோகம் என்றால் என்ன?

நிம்மதியை தேடி…

நாள் முழுக்க யோகம் மட்டுமே செய்து வரும் ஒரு யோகிக்கு பல மாதங்களாக மனதில் ஒரு வெறுமை. இனம் புரியாத வேதனை. அதிகாலை முதல் இரவு வரை யோகம் என்ன, மூச்சையடக்கி பிராணாயாமம் என்ன, அடிவயிற்றிலிருந்து ஓம்கார ஒலி எழுப்புவது என்ன… ம்ஹும்.. எங்கயோ ஒன்று இடித்தது.

தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளி கோயிலின் எதிரே இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வார் ராமகிருஷ்ணர்.

காளியின் தரிசனம் வேண்டி தன் தூய பக்தியினால் காளியிடம் வேண்டினார். மன்றாடினார். பலவாறு முயற்சித்தும் காளி தரிசனம் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அங்கிருந்த கத்தியால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றார்.அப்போது விக்கிரகத்தில் இருந்து வெளிப்பட்டு தன் சொரூபத்தை காட்டியருளினாள் தேவி. பின் நினைத்த போது எல்லாம் அவருக்கு காட்சியருளினாள் தாய் காளி. அவரோடு பேசினாள். அவர் தந்த உணவினை உண்டாள்.

நேரே ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று முறையிட்டார்.
ராம்கிருஷ்ணர் ஒரு கடும் சாக்த யோகி.

யோகம் எல்லாம் செய்கிறாயே, நீ எதன் மீதாவது அன்போ, பற்றுதலோ வைத்திருந்தாயா? இது ராம்கிருஷ்ணரின் கேள்வி.

அன்பும் இல்லை, வம்பும் இல்லை. எதன் மீதும் நான் பற்றுதல் வைக்கவில்லையே!

நன்றாக யோசி! அட! உன் வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடிக்காவது கருணையுடன் தண்ணீர் விட்டாயா?

இப்பொழுது அவசர யோகி, மெல்ல தயங்கி, தயங்கி தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
கதைக்குள் கதை.

ஒரு நாள் காட்டு பகுதியில் ஒரு பசு மாட்டை பார்த்தேன். பசியுடன் இருப்பது போல தெரிந்தது. என் கையிலிருந்த புற்களை அதற்கு போட்டேன். சாப்பிட்ட பின், என் பின்னாடியே வந்து விட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.
பின்பு தினமும் அதற்காகவே புற்கள் பறித்து வந்தேன். தொழுவம் ஒன்று உருவாக்கி, நீர் தொட்டியும் அமைத்தேன். அந்த பசுவும் நன்றியோடு எனக்கு தினமும் பால் தர ஆரம்பித்தது.

மிகுதியான பாலை உறை ஊற்றி தயிராகி, அதிலிருந்து வெண்ணெய் கடைந்து, உருக்கி நெய்யாக்கி, தீபம் ஏற்றிய பின் சிறிது எனக்கும் பயன் படுத்தினேன்.

ஒரு நாள் இரவு, வழிப்போக்கராக ஒரு யோகி வந்தார். அவருக்கு நெய்யில் செய்த கேசரியை சாப்பிட கொடுத்தேன். நன்றாக சாப்பிட்ட பின், இந்த காட்டில் கேசரி செய்ய உனக்கு நெய் எப்படி கிடைத்தது?
என கேட்டார்.

எனது பசு மாட்டின் கதையை சொன்னேன். அவர் முகம் மாறி விட்டது. எதன் மீதும் பற்று வைக்காமல் இருப்பவனே யோகி, நீ ஒரு மாட்டை கட்டி, பால் கறந்து கொண்டிருக்கிறாயே? என்று கோபமாக சொல்லி விட்டு சென்று விட்டார்.

அவர் சென்ற பின், எனக்கும் அவர் சொன்னது சரியென்று தோன்றியது. மாட்டை தொழுவத்திலிருந்து விடுவித்தேன். என் மனம் ஆறவில்லை. எனது குடிசையையும் தீயிட்டு கொளுத்தி விட்டு இன்னொரு புதிய இடத்துக்கு சென்று விட்டேன். 6 மாதமாக யோகம்…

போதும்… போதும்… புரிந்து விட்டது. முதலில் அந்த மாட்டை தேடி கண்டுபிடி. அதற்கு மறுபடியும் உணவளித்து வா. ஒரு வருடம் கழித்து என்னை பார்க்க வா. ம்ம் கிளம்பு..

நம் யோகிக்கு சப்புன்னு ஆகி
விட்டது. இருந்தாலும் சொன்னது ராம்கிருஷ்ணர்!

சரியென்று மாட்டை தேடி அலைய ஆரம்பித்தார். எங்கும் தட்டுப்படவில்லை.

எதுக்கும் பழைய எரிந்த குடிசைக்கு செல்வோம் என போய் பார்த்தால்…

அவர் எந்த இடத்தில் விட்டு விட்டு போனாரோ அதே இடத்தில் தான் அந்த மாடு அமைதியாக அமர்ந்திருந்தது.

கண்களில் நீர் பெருக, ஓடிச் சென்று அதன் கழுத்தை கட்டிக் கொண்டார். மளமளவென தன் குடிசையை திரும்ப நிர்மாணித்தார். தொழுவம், தொட்டி எல்லாம் வந்தது.

ஒரு வருடம் கழித்து, சொன்ன மாதிரி ராம்கிருஷ்ணரை சென்று பார்த்தார். நம் அவசர யோகியின் முகத்தில் ஆழ்கடலின் அமைதி தவழ்ந்தது.

யோகம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டாயா?

நன்றாக புரிந்து கொண்டேன் ஐயனே!

“எல்லாவற்றையும் துறந்து விட்டு எங்கோ ஓடுவதல்ல யோகம். எல்லாம் இருந்தும், எதன் மீதும் அதீத பற்றில்லாமல், நம்மை சுற்றியிருப்பவர்களுடன் கருணையுடன் பழகுவதே யோகம்!”

எனது யோகத்தை கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்.

இங்கு பசு என்பது அவரவர் குடும்பத்தை உருவகமாக குறிக்கும்.

இல்லற வாழ்க்கையில் நல்லொழுக்கத்தை போதிப்பது ஆன்மீகம் தான்!

எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது என்பதனை சொல்லி தருவதும் ஆன்மீகம் தான்!

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இல்லறம் நல்லறமாக சிறக்க ஆன்மீகமே நம் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது!!

கடவுளை நம்பினோர் கெடுவதில்லை!! இல்லற வாழ்க்கையில் பிரகாசிக்கும் தீபம் தான் ஆன்மீகம்!! ஒளிமயமான எதிர்காலம் அமைய ஆன்மீகம் தான் இல்லற வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி!!

ராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தர், பக்த துக்காராம், ராமலிங்க அடிகள், ஆப்பூதி அடிகள், சுந்தர மூர்த்தி நாயனார், மங்கையர்க்கரசியார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், என நாயன்மார்களும் ஆழ்வார்களும் மகான்களும் இல்லற வாழ்க்கையில் ஆன்மீகம் கொண்டு சிறந்த உதாரணமாக வாழ்ந்துள்ளனர். மற்றொரு உதாரணமாக வள்ளுவன் வாசுகியை கூட சொல்லலாம். இவர்களில் இல்லறத்திற்கு திருக்குறளில் உள்ள குறள்களே சான்று!!

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தையும் எழுதியுள்ளார். இல்லறம் பற்றியும் எழுதியுள்ளார். நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பண்புகளும் திருக்குறளில் உள்ளது. திருக்குறளில் உள்ள படி வாழ்ந்தாலே இல்லறம் நல்லறமாக வாழலாம்!!

ஒவ்வொரு சந்தோஷ தருணங்களிலும், கடின நேரத்திலும், நம்மோடு தோள் நிற்பது நம் குடும்பமே! மற்றதெல்லாம் அந்த வழிப்போக்கர் யோகியை போன்றவர்களே!

இங்கு எல்லாம் மதங்களிலும் ஆன்மீகம், இல்லறம் நல்லறமாக சிறக்க வழிகாட்டுகிறது என்பதே நிதர்சனமான உண்மை!!

Leave a Reply