மாரி அம்மன் வழிபாடு முறைகள் நம்முடைய வீட்டில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வமும் நிறைந்து இருக்க பெண் தெய்வமாக இருக்கக் கூடிய அம்பாளை வழிபட வேண்டும். சில பேருக்கு இந்த அம்மன் குலதெய்வம் ஆகவும் இருப்பது உண்டு. இவருக்கு மாரியம்மன் என்பது பெயராகும். இந்த மாரியம்மன் கோடையில் மழை பொழிய வைத்து, ஊரை காப்பாற்றும் அம்மனாக திகழ்கிறாள். மாரி என்றால் மழை என்பது பொருளாகும். அதனால் தான் இந்த அம்மன் மாரியம்மன் நோய்களை தீர்க்கும் வேம்பு மரத்தை தல விருட்சமாக கொண்டுள்ள இந்த சக்தி மாரியம்மன் பல இடங்களில் பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு பெண் தெய்வமாக விளங்குகிறார். இவர் உள்நாடு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த மாரியம்மன் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் எத்தகைய சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி விடுமாம். மாரி அம்மனை வழிபடும் விதம் ரொம்பவே எளிமையானதாக இருக்கிறது. இந்த அம்மனை மனமுருக வேண்டுபவர்களுக்கு குடும்பத்தில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாரியம்மன் படத்தை வீட்டில் வைத்து அதற்கு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாள் தவறாமல் இந்த தீபம் ஏற்றி வழிபடுங்கள். இதற்காக ஒரு சிறிய அளவிலான தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சுத்தமான குங்குமத்தை போட்டுக் கொள்ளுங்கள். கலப்பட குங்குமத்தை போடக்கூடாது. குங்குமத்தை போட்டு அதன் மீது ஒரு அகல் விளக்கு ஒன்றை வையுங்கள். அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் படிக்க ; மனக்குழப்பம் தீர இந்த அம்மனுக்கு கேழ்வரகு தான் பிடித்த உணவாக இருக்கிறது. எனவே பொங்கல் அல்லது கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகள் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் படைத்து குங்குமத்தின் மீது விளக்கு வைத்து குங்கும விளக்கு ஏற்றி மேற்கூறிய இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்து வர குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி வர துவங்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் படிப்படியாக அது குறைய துவங்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். அந்த வீட்டில் என்ன பிரச்சனை இருந்தாலும், அது உடனே தீரும். சுபகாரியங்கள் நடைபெறும். இல்லத்தில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த இந்த குங்கும விளக்கை மாரியம்மனுக்கு ஏற்றி தொடர்ந்து அவரின் அருளை பெறுக
ஒரு மனிதனுக்கு மன குழப்பம் வருவது இயற்கையான ஒரு விஷயம் தான். சந்திரன சரி செய்து கொள்ள மாரியம்மன் வழிபாடு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும். வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். நம்மளால முடிந்த பொருட்களும் மாரியம்மன் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம்.
அபிஷேகத்திற்கு பால், இளநீர், தேன் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அலங்காரம் செய்ய அழகான புடவையையுமே வாங்கி கொடுக்கலாம். சிவப்பு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது கூடுதல் பலனையும் சிறப்பையும் நமக்கு கொடுக்கும். அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்வதற்காக குங்குமம் வாங்கி கொடுக்கலாம் பெரும்பாலும் நிறைய அம்மன் கோவில்களில் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
பூஜைக்கு உங்களால் முடிந்த காணிக்கையும், பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம். பௌர்ணமி பூஜையில் உங்களால் முடிந்த நைவேதியத்தை செய்து கொண்டு போய் அம்பாள் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து நைவேத்தியத்த உங்கள் கையால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதான செய்யலாம். இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவதால் மன சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அம்மன் கோவிலுக்கு செய்யக்கூடிய பிரசாதத்தை கூடுமானவரை பச்சரிசியில் செய்வது நமக்கு கூடுதல் சிறப்பு கொடுக்கும். ஆண்கள் மனக்கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவராமல் கோவில்களெல்லாம் முடி இறக்கம் செய்யலாம் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் எல்லாம் வேண்டுதலும் வைத்து மொட்டை அடிப்பார்கள்.
அதனைப்போலவே ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று உங்களுடைய முடி காணிக்கையாக கொடுக்கும் போது மனசு ஒரு சில நாட்களில் தெளிவு பெறும். இது ஆண்களுக்கு மட்டும், பெண்கள் அம்மன் கோவிலுக்கு சென்று பூ முடி கொடுக்கலாம். இவ்வாறு அம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபாடு செய்தோம் எனில் மன குழப்பம் முழுவதும் நீங்கிவிடும்.