மனதின் ஆற்றல்கள்

மனதின் ஆற்றல்கள்…!


ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம்உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்.

உலகில் தோன்றிய மாபெரும் தீர்க்கதரிசிகளும் மகான்களும் ஞானிகளும் அனைவரும் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்கள் தங்களுடைய ஒரே ஆயுட்காலத்திலேயே மனித வர்க்கத்தின் முழு வாழ்க்கையையும், வாழ்ந்து, சாதாரண மக்கள் கூட்டம் நிலையைப் பரிபூரண எடுத்துக்கொள்ளும் கால பெற அளவு முழுவதையும் கடந்துவிடுகிறார்கள். ஒரே வாழ்க்கையில் அவர்கள் தங்களைப் பரிபூரணப்படுத்திக் கொண்டுவிடுகி றார்கள். வேறு எதைப் பற்றிய சிந்தனையும் அவர்க ளுக்கு இருப்பதில்லை. ஒருபோதும் வேறு எந்த வித மான கருத்துக்காகவும் ஒரு கணமும் அவர்கள் வாழ வில்லை.இதனால் அவர்கள் அடைய வேண்டிய பாதை அவர்களுக்குக் குறுகியதாகி விடுகிறது. உள் ளத்தை ஒருமுகப்படுத்துவது என்பது இதுதான் மனதின் ஆற்றலை ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து செல்வத னால், தேவையான காலத்தை இவ்விதம் நாம் சுருக்கி விடலாம்.

ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள, செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ,கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளா வளா, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

உலகிலுள்ள அறிவு அனைத்தையும், மனதின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துவதைத் தவிர, வேறு எந்த வகையால் மக்கள் பெற்றிருக்கிறார்கள். மூடப்பட்டுள்ள கதவை எப்படித் தட்ட வேண்டும், எப்படித் தேவையானபடி தாக்க வேண்டும் என்பது மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால், உலகம் தனது இரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும், தாக்கும் வேகமும் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம்தான் கிட்டுகிறது. மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு ஓர் எல்லையே இல்லை.

மனது அதிகமாக ஒருமுகப்பட்டப்பட்ட அதன் ஆற்றல் அதிகமாக ஓர் இடத்தில் செலுத்தப்படுகிறது. இதுதான் மனதின் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும் .

மேலும் படிக்க : விவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…!

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும், எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களைஅடக்கியாள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்குப் பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

சுதந்திரம் பெற்றவர்களாம்! நமது மனதை ஒருகணங்கூட அடக்கியாள முடியாத நாம், அவ்வளவு ஏன், ஒரு கருத்தின் மீது நமது மனதை உறுதியாக நிலைத்திருக்கச் செய்ய வகையறியாத நாம், மற்றச் சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒருமுனையில் (குறிப்பிட்ட ஒன்றின் மீது) ஒரு கணம் மனதை ஒருமுகப்படுத்தத் தெரியாதவர்கள் அல்லவா நாம்? அப்படி இருந்தும் நம்மை நாம் சுதந்திரமானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்! இதை நினைத்துப் பாருங்கள் ! …அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்று விடும்; நம்மைப் பிளந்து விடும்; அழித்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

மக்களுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு, அவர்கள் தங்களுடைய உள்ள மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலின் வேற்றுமையில்தான் அடங்கியிருக்கிறது. எந்தத் துறையைச் சேர்ந்த வேலையானாலும், வெற்றி அனைத்தும் இந்த மன ஒருமைப்பாட்டின் விளைவாகவே வருகின்றன. மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலில் மக்களுக்கு உள்ள வேற்றுமையே, ஒருவனுக்கும் மற்றொரு வனுக்கும் உள்ள வேறுபர்டாகவும் அமைகிறது. மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள மனிதனை, மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள மனிதன் ஒருவனோடு ஒப்பிட்டுப் பார். அவர்களிடையே உள்ள வேற்றுமை, மனதை ஒருமுகப்படுத்தும் திறமைக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.

சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

அற்ப இதயமுடைய மனிதர்களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? இந்த உலகில் எதையும் அவர்களிடமிருந்து நீ எதிர்பார்க்கமுடியாது! நீ கடலைக் கடக்க விரும் பினால் இரும்பைப் போன்ற மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.

நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால், அந்த எண்ணங்கள் செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடி அடிக்கும் வரையிலும் அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால், அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை.

மனித சமுதாயத்தின் வரலாற்றில் தெய்வத்தின் தூதுவர்களாக ஆசாரியர்கள் தோன்றுவதையும், பிறந்தது முதல் அவர்கள் தங்களது வாழ்க்கை நோக்கத்தைக் கண்டறிந்து அதற்கு வடிவம் கொடுத்திருப்பதையும்’ நீ பார்க்கலாம். அவர்களின் வாழ்க்கை நோக்கம் முழுவதும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிலி ருந்து இம்மியளவும் அவர்கள் பிறழாதிருப்பதை நீ காண்பாய். ஏனென்றால், ஒரு குறிக்கோளுடன், மக்களுக்குத் தருவதற்கான ஒரு செய்தியுடன் அவர்கள் வருகிறார்கள்… அவர்கள் பேசும் போது ஒவ்வொரு சொல்லும் நேரிடையாகத் தாக்குகிறது. அது ஒரு வெடிக்குண்டைப் போல வெடிக்கிறது. சொல்லுக்குப் பின்னால் சக்தி இல்லாவிட்டால், அதில் என்ன பயன் இருக்கிறது?

நீ எந்த மொழியில் பேசினால் என்ன ? உனது மொழியை நீ எப்படி அமைத்துக் கொண்டால் என்ன? அதை நீ சுத்தமான இலக்கணத்திலோ அல்லது  அருமையான அடுக்கு மொழியிலோ பேசா விட்டால்தான் என்ன? உனது மொழி அலங்காரம் உடையதாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? உன்னிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. பேசுபவன் ஒன்றைக் கொடுப்பதும், கேட்பவன் அதைக் கிரகித்துக் கொள்வதும்தான் பிரச்னை. சும்மா வெறுமனே காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்ப தல்ல. முதல் கேள்வி இதுதான் உன்னிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந் தால் அதை மற்றவர்களுக்குக் கொடு.

நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அதற்கு அர்ப்பணித்துவிடு. ஒரு முறை சன்னியாசிப் பெரியார் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் தமது கடவுள் வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எவ்வளவு ஊன்றிக் கவனமும் கருத்தும் செலுத்தினாரோ, அதே அளவுக்கு ஊன்றிய கருத்தோடு தமது பித்தளைச் சமையல் பாத்திரங்களையும் தேய்த்துப் பொன் போலப் பிரகாசம் உள்ளதாகச் செய்துகொள்வார்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் தூய்மையை எப்படிப் பெறுவது? நாம் அனைவரும் காட்டிலுள்ள குகைகளுக்குப் போய்விடலாமா? அதனால் என்ன நன்மை வந்துவிடும்? மனம் கட்டுப்பட்டு அடங்கா விட்டால், குகையில் வாழ்வதனால் மட்டும் எந்தவிதப் பயனும் கிடைக்காது. ஏனென்றால், இதே மனம் எல்லாத்தொந்தரவுகளையும் அங்கேயும் கொண்டு வந்து சேர்த்துவிடும். குகையில்தான் எல்லாப் பேய்களையும் நாம் பார்ப்போம். ஏனென்றால் எல்லாப் பேய்களும் நமது மனதிலேயே இருக்கின்றன. கட்டுப்பட்டு மனம் அடங்கியிருந்தால், நாம் எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடம் குகையாக ஆகிவிடும்.

நமது சொந்த மனப்பான்மைதான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துக்கொள்ளக் கற்றுக் கொள்.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply