பணம் எனு‌ம் பொக்கிஷம்


1.இந்த கட்டுரையில் உள்ள அனைத்து
கருத்துகளும் உலகில் உள்ள அனைத்து
மக்களும் பின்பற்ற வேண்டும் இந்த கலாச்சாரம் அந்த கலாச்சாரம் என்று எதையும் பிரிக்க
முடியாது அனைவரும் சமம் மனிதம் என்ற
ஒற்றை சொற்களில்.


2.இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஆணும்
இனிவரும் காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்த பிறகு தனக்கு பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்க்க வேண்டும் அதில்
முக்கியமாக பெண்களை மதிக்க வேண்டும்
என்ற விஷயத்தை வாரத்திற்கு ஒரு முறையாவது அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டும்
அதை அவர்கள் பின்பற்ற வேண்டும் அதற்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


3.நான் பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் பார்க்கிறேன் ஒருபொழுதும் தவறான
கண்ணோட்டத்தில் நான் பார்ப்பதில்லை
எனது எண்ணம் மிகவும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது
உங்கள் மனதில் இருக்க வேண்டும்.


4.ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்
போது அறிவு சிறப்பான அறிவு?
பொது அறிவு மற்றும் சிறப்பான அறிவு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன பொதுஅறிவு என்பது சினிமா விளையாட்டு அரசியல் அவர்கள் எப்போது வந்தார்கள் அவர்கள்
என்ன சாதித்தார்கள் போன்ற விஷயங்களை
மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு அதை
மிகவும் பெருமையாக சொல்லிக் கொண்டு
தன்னை புத்திசாலி போன்ற காண்பித்துக்
கொண்டு நிறைய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் மேற்கொண்ட ஆய்வில் 100 பேரில் 90 பேர் இது போன்ற பொது
அறிவு சார்ந்த தான் இருக்கிறார்கள்.
சிறப்பான அறிவு என்பது உங்களுக்கென்று
ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொண்டு
அது பெருவாரியான மக்களுக்கு சேவையோ
கண்டுபிடிப்புகள் கொடுக்கிறார்கள் என்றால்
அது உங்களுடைய தனிச்சிறப்பு அதுதான்
சிறப்பான அறிவு.


பொது அறிவும் தேவைதான் ஆனால் அது
அரசாங்க உத்தியோகத்திற்காக அது சார்ந்த
விஷயங்களை தேவைப்படும்போது தெரிந்து
கொள்ளலாம் ஆனால் தேவையற்ற விஷயங்களை கற்றுக்கொண்டு அதை பெருமையாக
பேசுவது பயனில்லை!


5.இந்த உலகத்தை நீ புரிந்து கொண்டால்
உன்னை விட புத்திசாலி வேறு யாருமில்லைஇந்த உலகத்தை எப்படி புரிந்து கொள்வது
நம்மை சுற்றி இருக்கும் மக்களைப் பற்றியோ
எந்த சிந்தனையும் செலுத்தாமல் ஒவ்வொரு
மனிதர்களும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள் அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் இவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்காமல் இருக்க வேண்டும்.


6.இந்த உலகம் ஒரு ரகசிய அமைப்புகளால் தான் இயக்கப்படுகிறது என்று பல
மக்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்
அது உண்மை இருக்கும் பட்சத்தில் அதில்
இருந்து எப்படி தப்பிப்பது என்றுதான் நாம்
யோசிக்க வேண்டுமே தவிர அதிலேயே
கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் துளியும் பயனில்லை அதற்கான வழிமுறைகள்
தான் இந்த பயிற்சியில் நீங்கள் தவிர்க்க
வேண்டும் என்று நிறைய கருத்துக்களை
நான் சொல்லியிருக்கிறேன் இந்த கருத்துக்களை நீங்கள் தவிர்த்தால் ரகசிய அமைப்பின்
பிடியிலிருந்து தப்பிக்கலாம்.


7.பிரபஞ்சம் சொல்கிறது அனைவரும் நல்லா
இருக்கணும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய் ஆனால் நல்லா இருக்க வேண்டிய
மனிதர்கள் அவர்கள் எண்ணத்தை மாற்றவேண்டும் அப்படி மாற்றினால் அவர்கள் நிச்சயம் நல்லா இருப்பர்கள் நீ சொல்வது 10
சதவீதம் மட்டுமே வேலை செய்யும் மீதி 90%
வேலை செய்யவேண்டுமென்றால் அந்தந்த
மனிதர்கள் நல்லதே நினைக்க வேண்டும்.


8.அவர்களது எண்ணங்களை மாற்றினால்
அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும்
ஆனால் மக்கள் எண்ணங்களை மாற்றாமல் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு
திட்டிக் கொண்டு பொய் சொல்லிக்கொண்டு
ஏமாற்றிக்கொண்டு பயத்துடனும் பொறாமையுடனும் இருக்கிறார்கள் அப்புறம் எப்படி
நல்லா இருக்க முடியும்.
உன்னை நீ பாராட்டு உன்னை முதலில் நேசி
உன்னைப் பற்றி பெருமையாக உனக்குள்ளே
சொல்லிக்கொண்டிரு நல்லது நினைத்துக்
கொண்டே இரு எல்லாம் நல்ல விஷயங்கள்
உன்னை நோக்கி வரும்.


9.தினசரி நீங்கள் செய்ய
செய்ய வேண்டியவை
அனைத்தும் ஒரு நோட்டு புத்தகத்தில் ஒரு
சிறிய காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


10.பயிற்சியில் சொல்லியுள்ள அனைத்துக்
கருத்துக்களையும் 30 நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்து பாருங்கள் உங்களுக்குத்
தெரியும் அப்போது நான் சொன்னது சரியாக
இருக்கிறதா இல்லை தவறாக இருக்கிறதா
என்று முடிவு செய்யுங்கள் இல்லை என்றால் அப்படி நான் தவறாக சொல்லியிருந்தால்
நான் இந்த பயிற்சியை உடனே நிறுத்தி விடுகிறேன்.
11.நீங்கள் சினிமாவை பற்றி அடிக்கடி பேசிக்
கொண்டே இருக்காதீர்கள் நீங்கள் சினிமாவில் சென்று சாதிக்கப் போகிறீர்கள் ஒரு
இயக்குனராக உருவாக்குவதாக போகிறீர்கள்
என்றால் அதைப் பற்றி பேசிக் கொள்ளுங்கள்
தவறு எதுவும் இல்லை ஆனால் முயற்சி செய்யாமல் சும்மா பேச்சில் மட்டும் பேசுவேன் என்றால் அது உங்கள் நேரத்தை வீணடிக்கும்

 

  1. நீங்கள் தினமும் எழுந்திருக்கும் பொழுதுஎதை முதல் வார்த்தையாக சொல்லி எழுந்து
    இருக்கிறாயோ மற்றும் முதல் செயலாக
    இருக்கிறதோ அதை சார்ந்து அந்த நாட்கள்
    முழுவதும் அமையும் அதனால் நீங்கள் சொல்லும் முதல் வார்த்தையும் முதல் செயலும் நல்லதாக இருக்கவேண்டும்.
    13.உங்க வாழ்க்கையில யாரிடமாவது சென்று
    எனக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது தெரியுமா அப்படி என்று நீங்கள் சொல்லும் பொழுது பதிலுக்கு அவர்கள் எனக்கு
    அதைவிட பெரிய பிரச்சினை இருக்கிறது
    என்று சொல்வார்கள் ஒருபோதும் யாரிடமும் சென்று எனக்கு எவ்ளோ பிரச்சனை இருக்கு
    தெரியுமா அப்படி என்று சொல்லாதீர்கள்.
    14.இப்போதுதான் எனக்கு இவ்வளவு கடன்
    இருக்கும் தெரியுமா அப்படி என்ற வார்த்தையும் சொல்லக் கூடாது அதற்கு பதிலாக அவர்கள் அதை விட அதிகமாக தனக்கும் கடன்
    இருப்பதாக சொல்வர்கள்.
    15.அதே போல் தான் உங்களது பிரச்சினையை சொல்லும்பொழுதும் இதெல்லாம்
    பிரச்சனையா இதைவிட பெரிய பிரச்சனை
    எல்லாம் நிறைய பேருக்கு இருக்கிறது அப்படி
    என்று சொல்வார்கள்.
    16.நீங்கள் செய்ய போகும் தவறுகளுக்கு அல்லது பிடிக்காத விஷயத்திற்கு செய்ய போகும்
    போது ‘வார்த்தைகள்’
    ‘என் வாழ்நாளில் செய்யப் போறது இதுவே
    கடைசியாக இருக்கும்’ எப்போதும் இதை
    சொல்லாதீர்கள் இது ஒரு மிக பெரிய கெட்ட
    பழக்கம்.
    17.செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்
    கொண்டிருக்கிறீர்கள் என்றால் பேசுவதன்
    மூலம் உங்களுக்கு ஏதாவது பலன் இருக்கிறது என்றால் பேசுங்கள் தவறு எதுவுமில்லை ஆனால் சினிமா விளையாட்டு அரசியல் போன்ற துறையில் உள்ள ஒரு தனிநபரை பற்றி பேசிக்கொண்டு நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள்
    அதிக அளவில் நேரத்தை வீணடிக்கக்கூடிய
    நபராக இருக்கிறீர்கள் அதனால் தான் உங்கள் வாழ்வில் நிறைய பிரச்சனை பிரச்சனைகள் கஷ்டம் மனக் கவலை தொல்லை நிம்மதி
    இல்லாத வாழ்க்கை வாழ்வில் முன்னேற்றம்
    இல்லாமல் இருந்த இடத்திலேயே அப்படியே
    இருப்பது போன்ற சூழ்நிலை உங்களுக்கு
    அமையும் பேசலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
    18.மூச்சுக் காற்றை இழுக்கும் பொழுது
    அனைத்து நல்ல சக்திகளும் உங்கள் உடலில் செல்வது போல் நினைத்துக் கொள்ளுங்கள் அடுத்தது இழுத்த மூச்சுக்காற்றை
    வெளியிடும் பொழுது அனைத்து கெட்ட சக்திகளும் உங்களை விட்டு வெளியே செல்வது போல் நினைத்துக் கொள்ளுங்கள் இந்தப் பயிற்சியை முப்பத்தொரு நாட்களுக்கு 31
    முறை செய்யுங்கள் இதன் மூலம் மிகப் பெரிய
    பலன் உங்களுக்குக் கிடைக்கும்.
    19.நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
    அல்லது செயலில் அக்கறையுடன் இருக்கிறீர்களா?
    ஒரு நாளில் நீங்கள் எத்தனை மணிக்கு நேரம்
    பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு
    நோட்டில் எழுதுங்கள்
    ஒரு நாளில் நீங்கள் எத்தனை மணி நேரம்செயலில் நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள்?
    பேச்சில் நீங்கள் அதிகம் நேரம் செலவு
    செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாழ்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக
    இருக்கும் அதை நீங்கள் தவிர்த்து செயலில்
    அதிக நேரங்களை பயன்படுத்துங்கள்.

 

Leave a Reply