தெய்வீக விருட்சங்களும் அதன் பலன்களும்!

தெய்வீக விருட்சங்களும் அதன் பலன்களும்!


வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது.

விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர்.

நாம் நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை அனைத்துமே தெய்வாம்சம் நிறைந்தவைதான்.

மரங்களை தெய்வீக அம்சம் கொண்டதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது.

அத்தகைய மரங்களில் மகிழமரம், பன்னீர் மரம்,குறுந்த மரம், அரிநெல்லி மரம் ஆகிய மரங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவை அவைகளை குறித்த ஆன்மீக தகவலையும்- பலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.

மரம் தான் நீருக்கு ஆதாரம் நீர் இல்லையேல் பூமியில் எங்கும் பஞ்சமும் பட்டணியும் தலைவிரித்து ஆடும் அவலம் ஏற்படும் இதை தான் வள்ளுவரும் நீரின்றி அமையாது உலகு என்றும் கூறுகிறார்.

அசோக மரம்:

அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

அத்திமரம்:

அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார்.

இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை.

மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.

அரசமரம்:

அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும்.

இம்மரத்திலிருந்து வெளிபடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

அரிசந்தன மரம்:

திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

ஆலமரம்:

ஆலமரம் சிவனின் அம்சமாகும்.

இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.

கருநெல்லி மரம்:

திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு.

வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

குறுந்த மரம்:

வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கொன்றை மரம்:

சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

சந்தன மரம்:

சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன.

இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

மாதுளம் மரம் :

மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.

புளிய மரம் :

புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும்.

புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும்.

புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.

கருவேல மரம் :

கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.

காட்டுமரம் :

காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும்.

ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர்.

இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.

வில்வமரம் :

வில்வமரம் சிவனின் அம்சமாகும்.

இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

வேப்பமரம் :

வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

மருதாணிமரம் :

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும்.

இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ மரம் :

ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும்.

இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி :

இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.

மாமரம் :

மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.

இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன.

சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.

அத்திமரம் :

அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார்.

இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை.

மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.

துளசி :

துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார்.

அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.

துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு.

இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

மேலும் படிக்க : தெய்வீக விருட்சங்களும் அதன் பலன்களும்!

என்றும் அன்புடன்

பொன்னி சுதாகரன்

Leave a Reply