திருப்பதி கோவிலில் உள்ள கடப்பாரை

திருப்பதிகோவிலில் உள்ள கடப்பாரை                                                                 திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும் போது பிரதான வாசலின் நுழைவாயிலில் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை உள்ளது. திருப்பதி திருமலையின் தண்ணீர்த் தேவையைத் தீர்த்து வைக்கும் குளமான கோகர்ப்ப ஜலபாகம் என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது.20-Jun-2022

திருப்பதியில் வழிபடுவதற்கு என்று ஒரு முறை உள்ளது. அந்த முறையில் வழிபட்டால் மட்டுமே திருப்பதி சென்று வந்த முழு பலனையும், திருமாலின் திருவருளையும் பெற முடியும். மற்ற இடங்களுக்கும், திருப்பதியை சுற்றி உள்ள கோவில்களுக்கும் செல்ல முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள 18 இடங்களை, கீழே உள்ள வரிசையின் அடிப்படையில் தரிசனம் செய்தால் திருப்பதி சென்று வந்த முழு பலனையும் அடைய முடியும்.

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய 18 இடங்கள் :

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய 18 இடங்கள் :

1. திருப்பதி சென்றுதும் முதலில் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும். வீடுகளில் அப்பாவிடம் நாம் நினைக்கும் காரியம் நடக்க வேண்டும் என்றால் அம்மாவிடம் தான் சொல்வோம். அதே போல் தாயாரை தரிசித்து, நமது கோரிக்கையை சொல்லி வழிபட்ட பிறகு, சுவாமியை தரிசிப்பதே சிறப்பானது.

2. பிறகு திருப்பதி பெருமாளின் அண்ணன் என சொல்லப்படும் கோவிந்த ராஜப் பெருமாளை வழிபட்டு, திருமலை பெருமாளின் அருளை பெறுவதற்கு அருள் செய்யும் படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

3. திருமலைக்கு சென்றதும் முதலில் புனித புஷ்கரணி தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதில் குளிப்பது கங்கையில் புனித நீராடியதற்கு நிகரானது. முழுவதுமாக தலை மூழ்கும் படி மூன்று முறை, “சீனிவாசா…வெங்கட ரமணா…கோவிந்தா கோவிந்தா” என சொல்லி மூழ்கி குளிக்க வேண்டும்.

4. அதற்கு பிறகு புஷ்கரணி குளத்திற்கு அருகில் உள்ள வராக சுவாமி கோவிலில் வழிபட்டு, அவரிடம் முதலில் அனுமதி பெற வேண்டும். திருமலையை பொறுத்த வரை சீனிவாச பெருமாள் இங்கு கோவில் கொண்டிருப்பதற்கு இடம் கொடுத்ததே வராக சுவாமி தான் என தல புராணம் சொல்கிறது.

5. நாம் செல்ல வேண்டிய தரிசனத்திற்கான நுழைவு வாயில் வழியாக சுற்றி, கோவிலுக்குள் நுழைவதற்கு முன் கால்களை சுத்தம் செய்வதற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அதில் கால்களை சுத்தம் செய்து விட்டு, நுழைவு வாயிலுக்கு வலது புறத்தின் மேல் கடப்பாரை ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும். அதனை தரிசிக்க வேண்டும். அனந்தாழ்வார் இந்த கடப்பாரையை பயன்படுத்தி பெருமாளை தாக்கினார். இதன் காரணமாகவே பெருமாளுக்கு தாடையில் கொட்டிய ரத்தத்தை நிறுத்த பச்சைக் கற்பூரம் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் : வறுமை, கஷ்டங்களை போக்கும் பெருமாள் ஸ்தோத்திரம்

திருப்பதி பெருமாள் :

திருப்பதி பெருமாள் :

6. கோவிலுக்குள் நுழைந்ததும் பலி பீடம் மற்றும் கொடி மரத்தை வணங்கி உள்ளே செல்லும் நுழைவு பகுதியின் மேற்புரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு கலசங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் இதை தரிசிப்பதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

7. உள்ளே சென்றதும் தங்க தகடுகளால் கதவில் ரங்கநாதர் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவரை வணங்கி நமது வேண்டுதல்களை இவரிடம் சொல்ல வேண்டும்.

8. ஆனந்த நிலையத்திற்குள் சென்றதும் முதலில் கருடாழ்வாரை வணங்க வேண்டும். பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் நமது வேண்டுதல்களை பெருமாளிடம் சொல்வார் என்பது நம்பிக்கை.

9. கருடாழ்வாரை வணங்கிய பிறகு அதன் மேற்கூரையில் பன்னிரெண்டு ராசிகளின் சின்னங்கள் தங்க தகடுகளால் பொறிக்கப்பட்டிருக்கும். அதை வணங்கிய பிறகு, பெருமாளை வணங்க வேண்டும்.

10. வெளியே வந்ததும் பரதபத வாசல் முன்பும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

11. பரமபத வாசலுக்கு எதிரே குபேர குளம் உள்ளது. அதை வணங்கி, அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை வாங்கி பருக வேண்டும்.

12. பிரகாரத்தை சுற்றி வரும் போது விமானத்தின் மேல் பகுதியில் வெங்கடேஷ பெருமாள் உருவம் இருக்கும். வெள்ளி கவசம் போடப்பட்டிருக்கும். அவரை வணங்கிய பிறகு பிரகாரத்தை வலம் வர வேண்டும்.

புனித வெள்ளி 2023 : தேவ மைந்தனின் தியாகத்தை போற்றும் திருநாள்

திருமலை திருப்பதி தரிசனம் ;

திருமலை திருப்பதி தரிசனம் ;

13. உண்டியல் இருக்கும் பகுதிக்கு வெளியே இருக்கும் தங்கத்தால் ஆன மகாலட்சுமி சிலையை வணங்க வேண்டும்.

14. உண்டியலுக்கு கீழ் குபேர சக்கரம் உள்ளதால் தான் திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக பணம் கொட்டுகிறது. இதை வலம் வந்து வணங்க வேண்டும்.

15. ராமானுஜரையும், யோக நரசிம்மரையும் வணங்கி வெளியே வந்ததும், மீண்டும் வாசலில் இருக்கும் ரங்கநாதரை வணங்கி, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி, சீக்கிரம் திருப்பதி பெருமாளை தரிசிக்க வர வேண்டும் என வேண்டிக் கொண்டு வெளியே வர வேண்டும்.

16. பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிறகு, மடப்பள்ளியை தொட்டு வணங்கி விட்டு வர வேண்டும். சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியம் தயாரிக்கும் இடம் மடப்பள்ளி. அதனால் மடப்பள்ளியை தரிசித்து, வணங்கி விட்டு வந்தால் நம்முடைய வீட்டில் அன்ன பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படாது.

17. மீண்டும் கொடி மரத்தை பார்த்து வணங்கி விட்டு, வெளியே வர வேண்டும். கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் அன்ன சத்திரத்தில் ஒரு வேளையாவது அங்கு வழங்கும் அன்ன பிரசாதத்தை வாங்கி உண்ண வேண்டும். திருப்பதியை பொறுத்தவரை பல இடங்களில் அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படும். இங்கு அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு பெருமாளே உணவு பரிமாறுவதாகவும், பக்தர்களுடன் அமர்ந்து பெருமாளும் தினசரி உணவு சாப்பிடுவதாக ஐதீகம்.

18. திருமலையில் இருந்து புறப்படுவதற்கு முன் கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கி, பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட வேண்டும்.

திருப்பதி கோவில் :

திருப்பதி சென்றால் திருப்பம் வரும். திருமலைக்கு மலை ஏறி செல்வோருக்கு வாழ்வில் ஏற்றம் வரும் என்பார்கள். ஆனாலும் திருப்பதி சென்று வந்த பிறகும் ஏதும் நடக்கவில்லை என சளித்து கொள்பவர்கள் ஏராளம். மற்ற கோவில்களை போல் திருப்பதி திருமலைக்கு நினைத்ததும் சென்று வரவோ, சுவாமி தரிசனம் செய்யவோ முடியாது. திருப்பதி செல்வதற்கு நாம் நினைக்க வேண்டும் என்பதை விட, நமக்கு தரிசனம் தர திருமலையப்பன் மனம் வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

Leave a Reply