சோடசக்கலை நேரம் – குரோதி வருடம் 2024 – 2025.

 சோடசக்கலை நேரம் – குரோதி வருடம் 2024 – 2025.


சோடசக்கலை என்றால் என்ன?

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை.

நினைத்ததை சாதிக்க உதவும் இந்த மாத சோடசக்கலை நேரம் :

*நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் 5-4-2019 பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை பகல் 1-55 முதல் 3-55 மணி வரை அமாவாசை சோடச கலை நேரம்.*

*எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?*

*எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?*
*இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?*

*அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.*

*இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.*

*( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)*

*மூன்றாவது மாபெரும் ரகசியம் தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,*

*அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.* அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன . *சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.*

* வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். *16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!*

இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள், செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது. அறிந்ததுமுதல் நிம்மதி, செல்வ வளம், மகிழ்ச்சி, என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார். சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும். *திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.* இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

*பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ), சகல உயிரினங்களும் (பாக்டீரியா, புல், பூண்டு , மரம், யானை, திமிங்கலம், சிறுத்தை, கழுதை, புலி, முயல், மான், பாம்பு, நீர்யானை, நட்சத்திர மீன், கணவாய் மீன், கடல்பசு, கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, பூரான், பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை, கழுதை, கோவேறுக்கழுதை, எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.*

*அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.*

*ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.*

மேலும் படிக்க : சித்திரை 1 – தமிழ் புத்தாண்டு!

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

*தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம். வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) . நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும். வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம். மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.*

*அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.*

*இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.*

*1.ஓம் ரீங் சிவ சிவ*
*2.ஓம் ரீங் அங் உங்*
*3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்*

*சோடசக்கலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் “யா கேப்ரியல்” (YAA GABRIEL) என்று பச்சை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.பச்சை மெழுகுவர்த்தி கிடைக்காதவர்கள் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.மேற்குத் திசை பார்த்து நின்று ஜெபிக்கவும்.*

*இஸ்லாமியர்கள் வெள்ளை ஆடை அணிந்து ஒழுச் செய்த பின், அத்தர் பூசி மேற்குத் திசை பார்த்து நின்று “யா வஹ்ஹாப்”(YAA WAHHAAB) அல்லது யா ராஃபியு (YAA RAAFIYU) என்று ஓதவும்.*

*மாபெரும் மகத்துவம் நிறைந்த நேரம் சோடச கலை நேரம். அவசியம் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் யாரும் தவற விடாதீர்கள்….*

சோடசக்கலை அற்புதமான நேரமாக கருதப்படுவது ஏன்…?

அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்..

ஆவணி அமாவாசை திதி இன்று பிற்பகல் தொடங்கி நாளை வரை உள்ளது. சோடசக்கலை தியான நேரம் மாலை 3.36 முதல் 5.36 மணி வரையாகும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.

மாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும்.
சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.

தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: குரோதி வருடம் – ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை எப்படி?

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4-ம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

குரோதி வருஷத்திய வெண்பா பலன்

கோரக் குரோதிதனிற் கொள்ளிமிகுங் கள்வரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் – கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங் குறையுமே
சொற்பவிளை யுண்டெனவே சொல்.

குரோதி ஆண்டு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாகும். இயற்கை சீற்றம், கள்வர் பயம், எதிரிகளால் அதிக தொல்லை இருக்கக் கூடும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இவற்றைத் தவிர்க்கலாம். தேவையான நேரத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும். காய்கறி பற்றாக்குறை காணப்படலாம், பயிர்களும் சுமாரான விளைச்சலைத் தரும் என்று இந்த வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

குரோதி வருஷத்திய ராஜா – செவ்வாய். மந்திரி – சனி, சேனாதிபதி, அர்க்காதிபதி – சனி, சஸ்யாதிபதி – செவ்வாய், தான்யாதிபதி – சந்திரன், ரஸாதிபதி – குரு, நீரஸாதிபதி – செவ்வாய், மேகாதிபதி – சனி, வருஷ தேவதை – உமா மகேஸ்வரர், பசு நாயகன் – பலபத்திரர். இவ்வருஷத்துக்கு விந்திய மலையில் தென்மேற்கு திசையில் வாருண மேகம் உற்பத்தியாகிறது. பெய்யும் மழையில் 50 சதவீதம் கடலிலும், 30 சதவீதம் மலையிலும், 20 சதவீதம் பூமியிலும் பெய்யும்.

குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உடல் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எரிமலைச் சீற்றம், கடல் தொந்தளிப்பு, மலைப் பிரதேசங்களில் மண் சரிவு, தீ விபத்துகள், ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது. அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும். மக்களிடையே ஒற்றுமை ஏற்படும். நாட்டில் விலைவாசி உயரும். காய் கனிகள் விலை உயரும். புதுவித நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கு தகுந்தவாறு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எல்லையில் போர் ஏற்படலாம்.

இந்தியா பல்வேறு வகையில் வளர்ச்சியை அடையும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பார்க்கும். நல்ல பலன் அளிக்கக்கூடிய வகையில் அவை இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறும். கரும்பு, மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும். சிவப்புநிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. குற்றச் செயல்களையும், தீராத நோய்களையும் களையும் பொறுப்பில் அவர்கள் உள்ளனர்.

வாழ்க்கை சீராக அமைய குடும்ப பந்தம் அவசியம். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, மனம் விட்டுப் பேசி அன்புடன் இருக்க வேண்டும். வீண் சந்தேகங்கள், வீண் விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெற்றோர், பெரியவர்களை மதித்தல், மகான்களை வணங்குதல், குலதெய்வ வழிபாடு, பழைய கோயில் புதுப்பிப்பு, ஏழை, எளியோருக்கு உதவுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

தங்கம், வெள்ளி, உலோகங்களின் விலை சில மாதங்களுக்கு குறையும். ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறுவார்கள், விவசாய நிலங்கள் வீடு கட்ட விற்கப்படும் அபாயம் உள்ளது. உணவு சாகுபடியில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட முன்வர வேண்டும். ஆக மொத்தம் இந்த ஆண்டு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டாகவும், பல வித அனுபவங்களைத் தரக் கூடிய ஆண்டாகவும் அமைகிறது.

லோகா சமஸ்து சுகினோ பவந்து (இந்த உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்) என்று அடிக்கடி சொல்லி வரவும். இந்த வாசகம் நேர்மறை நோக்கங்களை, தன்னலமற்ற தன்மையை ஊக்குவிக்கிறது. உள் அமைதி, ஒற்றுமையை வளர்க்கிறது. மன அழுத்தம், பதற்றத்தை போக்குகிறது.

குரோதி ஷோடஷக்  கலை நேரம்
சித்திரை10/11 23/24-4-24 செவ் – புதன் POURNAMYஷோடஷக்  கலை 4.47 TO 6.46 AM
சித்திரை 25  8-5-24  புதன் AMAVASI ஷோடஷக்  கலை 8.25 TO 10.24 AM
வைகாசி10  23-5-24 வியாழன் POURNAMY ஷோடஷக்  கலை 6.51 TO 8.50 PM
வைகாசி 24  6-6-54 வியாழன் AMAVASI ஷோடஷக்  கலை 5.47 TO 7.46 PM
ஆனி8  22.6.24 சனி POURNAMY ஷோடஷக்  கலை 6.22 TO 8.21 AM
ஆனி 21/22 5/6-7-24 வெள்ளி -சனி AMAVASI ஷோடஷக்  கலை 4.09 TO 6.08 AM
ஆடி 5 21-7-24 ஞாயிறு POURNAMY ஷோடஷக்  கலை 3.46 TO 5.45 PM
ஆடி19  4-8-24 ஞாயிறு AMAVASI ஷோடஷக்  கலை 4.27 TO 6.26 PM
ஆவணி 3 19-8-24 திங்கள் POURNAMY ஷோடஷக்  கலை 12.02 TO 2.01 NIGHT
ஆவணி  17    2-9-24 திங்கள் AMAVASI ஷோடஷக்  கலை 5.24 TO 7.23 AM
புரட்டாசி  1  17-9-24 செவ்வாய் POURNAMY ஷோடஷக்  கலை 10.22 TO 12.21 AM
புரட்டாசி 16  2-10-24  புதன் AMAVASI ஷோடஷக்  கலை 11.31 TO 1.30 NIGHT
புரட்டாசி  3  16-10-24  புதன் POURNAMY ஷோடஷக்  கலை 6.54 TO 8.53 PM
ஐப்பசி 15        1-11-24 வெள்ளி AMAVASI ஷோடஷக்  கலை 5.20 TO 7.19 PM
ஐப்பசி கார்த்திகை 1 15/16-11-24 வெள்ளி -சனி POURNAMY ஷோடஷக்  கலை 2.20 TO 4.19 NIGHT
 கார்த்திகை 15 30.11.24 சனி AMAVASI ஷோடஷக்  கலை 9.46 TO 11.45 AM
 கார்த்திகை29 14.12.24 சனி POURNAMY ஷோடஷக்  கலை 3.18 TO 5.17 PM
மார்கழி 15/16 30/31-12-24 திங்கள் -செவ் AMAVASI ஷோடஷக்  கலை 3.26 TO 5.25 NIGHT
மார்கழி 29 தை  1 13/14-1-25 திங்கள்-செவ் POURNAMY ஷோடஷக்  கலை 3.08 TO 5.07 NIGHT
தை  16/17      29/30-1-25  புதன்-வியாழன் AMAVASI ஷோடஷக்  கலை 5.40 TO 7.39 AM
தை    30          12.02.25 திங்கள் POURNAMY ஷோடஷக்  கலை 6.38 TO 8.37 PM
மாசி15        27.02.25 வியாழன் AMAVASI ஷோடஷக்  கலை 7.29 TO 9.28 AM
மாசி  29     13.03.25 வியாழன் POURNAMY ஷோடஷக்  கலை 10.17 TO 12.16 NOON
பங்குனி15  29.03.25 சனி AMAVASI ஷோடஷக்  கலை 3.54 TO 5.53 PM
பங்குனி29/30 12/13-04-25 சனி – ஞாயிறு POURNAMY ஷோடஷக்  கலை 5.00 TO 6.59 AM

சோடசக்கலை நேரம் – குரோதி வருடம் 2024 – 2025.

  • சோடசக்கலை நேரம் – குரோதி வருடம் 2024 – 2025.
  •  நீங்கள் லட்சுமி கடாட்சம் பெற்று பணக்காரர் ஆகவும், எப்போதும் நிரந்தர பணக்காரர்களாக இருக்கவும் கீழ்கண்டவற்றை தவறாமல் செய்யுங்கள்.
  •  உங்கள் மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதம் அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுங்கள்.
  • வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்
    ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
  •  தெய்வத்திடம் நீங்கள் வேண்டும் கோரிக்கை (திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும்) ஏதாவது ஒரு கோரிக்கை மட்டும் கூறி சோடசக்கலை நேரத்தில் தியானம் அல்லது மந்திர ஜபம் இருக்க வேண்டும்.
  • அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஆரம்பித்து திதி முடிந்து ஒரு மணி நேரம் வரை 2 மணி நேரம் தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.
  • இந்த இரண்டு மணி நேர சோடசக்கலை நேரத்தில் ஏதாவது ஒரு 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தி (மும்மூர்த்தி ) இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் தனது அருளை பொழிகிறார்.
  • தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது உங்கள் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும். அது உங்கள் உடல் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிக்கும் வலிமையைப் பொறுத்தது.
  • கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
  •  ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
  • இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள், செல்வந்தர்களில் பலரும் அவர்களுக்கு வேண்டியதை பெற்று சிறப்பான நிலையில் இருக்கிறார்கள் .
  • தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.
  •  வடகிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் அல்லது ஜபம் செய்யவேண்டும். வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது.
  • மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.
    வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
  • சோடசக்கலை நேரத்தில் மும்மூர்த்திகளை வணங்கி தியானம் செய்யலாம். அல்லது
  • கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தளி – திருமூர்த்தி மலையில் கோவில் கொண்டுள்ள, மும்மூர்த்திகள் இணைந்த ஸ்ரீ அமணலிங்கேஸ்வரரை வணங்கி தியானம் செய்யலாம். அல்லது
  • மும்மூர்த்திகள் இணைந்த அம்சம் கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி தியானம் செய்யலாம்.
  • இந்த நேர தியானத்தில் கீழே உள்ள
  •  1.ஓம் ரீங் சிவ சிவ
  •  2.ஓம் ரீங் அங் உங்
  •  3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
  •  4.ஓம் அமணலிங்கேஸ்வராய நமஹ
  •  5.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ
  •  6.ஓம் குரு தத்த நமோ நமஹ
    இந்த 6 மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
  •  16 ம் பெற்று பெருவாழ்வு வாழ்க. ♥

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply