சூரிய கிரகணத்தன்று வரும் சோமவார அமாவாசை…என்ன செய்தால் விருப்பங்கள் நிறைவேறும் ?

 சூரிய கிரகணத்தன்று வரும் சோமவார அமாவாசை…

என்ன செய்தால் விருப்பங்கள் நிறைவேறும் ?


அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அமாவாசை சில குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட கிழமை ஆகியவற்றில் வரும் அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைபித்ரு சாபங்களை நீக்கும் ஆற்றல் படைத்தது என கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு பங்குனி அமாவாசை, சூரிய கிரகணத்தன்று வருவதால் இந்த நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு சைத்ர அமாவாசை என்று பெர். இந்த நாளில் அன்னதானம் வழங்குவது தொழில், வேலையில் அதிக முன்னேற்றத்தையும், அதிக வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும். இந்த நாளில் குறைந்த பட்சம் இரண்ட நபர்களுக்காவது அன்னதானம் வழங்குவது நல்லது. அன்றைய தினம் கிரகணம் என்பதால் இந்த நாளில் என்ன செய்தால், எந்த தெய்வத்தை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை சோமவார அமாவாசை என அழைக்கிறோம். முன்னோர் வழிபாட்டிற்குரிய அமாவாசை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வந்தால் அது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். சோமவார அமாவாசை என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த நாளில் புனித நீராடுவது, விரதம் இருப்பது, மகாவிஷ்ணுவை வழிபட்டு, முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் உயர்வான புண்ணிய பலன்களை தரக் கூடியதாகும். அதிலும் இந்த ஆண்டு பங்குனி மாதத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசையாகவும், அதுவும் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் வருகிறது. இதனால் இந்த நாள் கூடுதல் சிறப்பு மிக்கதாகவும், மிகவும் அரிதான நாளாகவும் மாறி உள்ளது.

அமாவாசையில் வரும் சூரிய கிரகணம் :

பங்குனி மாத அமாவாசையானது ஏப்ரல் 08ம் தேதியான திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 02.55 மணி துவங்கி, ஏப்ரல் 09ம் தேதி அதிகாலை 12.36 வரை அமாவாசை திதி உள்ளது. அதே சமயம் ஏப்ரல் 08ம் தேதி காலை 09.12 மணி துவங்கி, ஏப்ரல் 09ம் தேதி அதிகாலை 02.22 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. முழு சூரிய கிரகணமாக இது நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும் ஜோதிட ரீதியாக இது மிகவும் அரிதான நிகழ்வாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மிக நீண்ட சூரிய கிரகணமாக இந்த கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் பகல் வேளையில் வானம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். சோமவார அமாவாசையில் சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டு, விரதம் இருப்பது வழக்கம். இந்த நாளில் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.

சூரிய கிரகணம் 2024 : கிரகணத்தன்று ராகு, சூரியனை விழுங்குவது உண்மை?

சோமவார அமாவாசையில் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் :

* முன்னோர்களுக்கு உணவு, நீர் உள்ளிட்டவைகளை படைத்து வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் பெயரால் தானங்கள் வழங்கினால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

* இந்த நாளில் அசைவம் மற்றும் மதுபானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* இந்த நாளில் உளுந்து, முள்ளங்கி போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

* முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்குரிய பித்ரு கடன்களை செலுத்திய பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சொல்ல வேண்டிய ஆரோக்கியம் தரும் 7 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

அமாவாசையில் தெய்வங்களின் அருளை பெற :​

* அமாவாசை அன்று மற்றவர்களிடம் கோபப்படுவதையும், வாக்குவாதம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

* இந்த நாளில் சிவ- பார்வதியை வழிபட்டு, சிவனுக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

* அரச மரத்தை 7 முறை வலம் வந்து வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுலாம்.

* காலையில் தண்ணீரில் கருப்பு எள் கலந்து தென் திசை நோக்கி, நம்முடைய முன்னோர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாற செய்வதால் சிவன், மகாலட்சுமி மற்றும் சனி பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும்.

​அரிதான அமாவாசை :

ஜோதிட ரீதியாக மிக அரிதான இந்திர யோகம் இந்த சோமவார அமாவாசை நாளில் உருவாவதால் இந்த நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் தற்போது சந்தித்து வரும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். பல ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி மாத அமாவாசை தினத்தில் இந்த இந்திர யோகம் வருகிறது. இந்த இந்திர யோகமானது ஏப்ரல் 08ம் தேதி மாலை 06.14 வரை உள்ளது. இந்த நேரத்தில் வழிபாடுகள், சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவது சிறப்பு. சிவ பெருமானுக்குரிய சோமவாரத்தில் வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் நடக்கும் கிரகணம் மற்றும் இந்திர யோக நேரத்தில் சிவனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ருத்ர அபிஷேகம் செய்து சிவனையும் ,பார்வதியையும் வழிபடுவது சிறப்பு.

என்றும் அன்புடன் :

பொன்னி சுதாகரன்,

பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்…

Leave a Reply