சீரடி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ; சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவிஆவர் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசிபெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல்நலக்குறைவு நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர்.கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்கிற தம்பதி பாத்ரி கிராமத்தில் வசித்துவந்தனர் அவர்கள் இருவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஒருநாள் இரவு பலத்த மழை பொழிந்தது. அப்போது படகோட்டியான கங்கா பாவத்ய தனது படகினை பாதுகாக்க ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார்.அப்போது அவரது மனைவி தேவகிரியம்மா மட்டும் இல்லத்தில் தனியாக இருந்தார் . அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த ஒரு முதியவர் வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது அதனால் நான் இன்று இரவு மட்டும் உங்களது வீட்டில் தங்கிக்கொள்கிறேன் என்றார். அதற்கு தேவகிரியம்மா சரி என்று கூறி திண்ணையில் படுத்துக்கொள்ள சொன்னார். பிறகு கதவினை தட்டிய அந்த முதியவர் தனக்கு பசி எடுப்பதாக கூறினார் . அதன்பின் தேவகிரியம்மா அவருக்கு உணவு அளித்தார். அதன் பிறகு தனக்கு கால் வலிப்பதாக கூறினார். அதனால் அவருக்கு கால் பிடித்து விடுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வெளியில் இருந்த அந்த இருவர் கடவுள்களான பரமசிவனும், பார்வதியும் ஆவர். அவர்கள் இருவரும் சேர்ந்து கதவினை தட்டி தேவகிரியம்மாவிற்கு காட்சியளித்தனர். பிறகு உனக்கு 3 குழந்தைகள் பிறக்கும் அதில் கடைசியாக நானே பிறப்பேன் என்று ஈஸ்வரன் கூறினார் பிறகு இருவரும் அங்கிருந்து மறைந்தனர். அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவரது கணவரிடம் நடந்ததை கூறினார். இதனை அவர் நம்பவில்லை. பிறகு கடவுள் கூறியபடி அடுத்தடுத்து குழந்தை பிறக்க ஆரம்பித்தது இதன் மூலம் கங்கா பாவத்யா கடவுளின் வருகையை நம்பினார். பிறகு ஈஸ்வரனின் தரிசனம் தனக்கும் வேண்டும் என்று அவர் காட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது தேவகிரியம்மாவிற்கு மூன்றாவது ஆன் குழந்தை பிறந்தது. அதனை அவர் இலைகளில் சுற்றிவைத்து விட்டு தனது கணவரை பின்தொடர்ந்து சென்றார். பிறகு அந்த குழந்தையை ஒரு முஸ்லீம் கண்டு எடுத்ததாகவும் அவரே 4 ஆண்டுகள் வரை அவரை வளர்த்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த குழந்தை தான் சாய் பாபா என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க… பிரம்ம மூகூர்த்தத்தின் ரகசியம் தெரியுமா?
நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.
ஷீரடி திருத்தலத்திற்கு சென்ற சாய்பாபா
குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம் ஆகும்.
சாய் பாபா இறப்பு : சாய் பாபா அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அனைவரும் அறியும் மகனாக விளங்கினார். பிறகு அக்டோபர் 15ஆம் தேதி , 1918 தேதி இறந்தார். இன்று அவரது சமாதி இருக்கும் சீரடிக்கு இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து சரிசெய்து செல்கின்றனர். மேலும் பல முஸ்லீம் பக்தர்களும் அவரை தரிசித்து செல்கின்றனர்.