சிவலிங்க வழிபாடு

சிவலிங்க வழிபாடு

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். அந்த லிங்கமானது மனித உருவமோ ! வேறு பிராணிகள் உருவமோ ! இல்லாமல் அது ஒரு வினோத வடிவமாக இருக்கிறது. அதை ஏன் வழிபட்டார்கள் ? அதுமட்டுமல்ல யாராவது துறவிகள் இறந்தாலோ அந்த இடத்திலே சாமி சமாதி ஆகிவிட்டார் என்று புதைத்த இடத்திலே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறார்கள். மனிதன் இறந்தால்கூட

சிவபதவி அடைந்துவிட்டார் என்று கூறுகின்ற நிலையைப் பார்கிறோம். பொதுவாக இந்தக் கூற்றிலே இருந்து சிவபதவி என்பது மிக மிக உயர்ந்த உன்னதமான பதவி என்பது மட்டும் புரிகிறது. ஆனால் எப்படி உயர்ந்த பதவி

என்பது மட்டும் புரிகிறது. ஆனால் எப்படி உயர்ந்த பதவி எனபது மட்டும் புரிவதில்லை! ஏன் மனித உருவமோ மிருக உருவமோ இல்லாத லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். மனிதனுக்கும் லிங்கதிற்கும் என்ன தொடர்பு என்பதை ஆராய்வோம். ஆண் பெண் புணரும்போது கோடிகணக்கான ஆண் உயிர் அணுக்கள் கொண்ட சுக்கிலத்தில் ஒன்றே ஒன்று மட்டும் பெண்ணின் சுரோணித முட்டையை துளைத்துக் கொண்டு செல்லும். உள்ளே சென்று சுரோணித முட்டையின் உள்ளே தலைமட்டுமே துளைத்து சென்றுவிடும். அதன் வால்பகுதி வெளியே துண்டித்து நின்றுவிடும். அதன்வடிவம் மேல்க்கண்டாற் போல் இருக்கும் . மேற்கண்ட வடிவத்திலேதான் தாயின் கருவிலே குழந்தை வளரும். சிவம் என்கிற வெட்டவெளியிலே இருந்து மூல அணுவான சிவசக்தியில் தோன்றிய உடலே மனித உடல். கோழி முட்டையில் கோழியும் , மான் வயிற்றில் பிறந்தது மான் போல சிவசக்தி அணுவில் இருந்து பிறந்த மனிதன் அதன் சாயலாகத்தான் பிறந்திருக்க வேண்டும் இது விதி. மனிதன் படைப்புகுண்டான மூல அணுவான சிவசக்தி வடிவத்தை எப்படி அறிவது ? பிரபஞ்சத்தில் உள்ளல கோட்கள் அத்தனையும் சுழன்று கொண்டு இருக்கின்றன. சுழன்று சுழன்று மிதந்த வண்ணம் உள்ளன. இந்த பிரபஞ்ச சுழற்சியில் பூமியும் சுழன்று கொண்டிருகின்றது. சுழன்று கொண்டிருக்கின்ற பூமியில் வாழும் மனிதனும் சுழலுகிறான். சுழன்று கொண்டு இருக்கின்ற இந்த மனிதனை உட்கார வைத்து சுழல் விட்டால் சிவலிங்க வடிவத்தோடு காணப்படுவான். ஆக மனித உடலானது “ஓம் “ என்ற அணுசக்தியின் பிரதிபலிப்பு என்பது உண்மை. மூலசக்தியின் அணு தன்மையே சிவசக்தி இயக்கம். ஆகவே மேற்கண்ட படம் மூலமும் விபரங்கள் மூலமும் மனித உடலானது ஆதிசக்தியின் மூல அணுவின் வடிவு பிண்டத்தில் சுக்கில சுரோணிதம் சேரும்போது லிங்க வடிவு எடுத்த பின்பு மனித உடலே லிங்கமாகக் காட்சி தருகிறது எனபது தெளிவான உண்மை. இந்த அடிப்படையில் ஆதி மூல அணுவின் வடிவம் சிவலிங்க வடிவமாகத்தான் இருந்தாக வேண்டும் . அதனால் துறவி இறந்த பின்பு சமாதியின் மேல் லிங்கத்தை வைத்து வழிபடுகிறார்கள். சிவமயமாய் ஆகிவிட்டார் யென்று கூறுகின்றனர். சிவமயம் என்றாலே வெட்டவெளி ஜோதியிலே ஐக்கியமாகிவிட்டார் எனபது பொருள்.

சமாதி என்றாலே ஆதியிலே சமம் ஆகிவிட்டார் எனபது பொருள். ஆகவே சிவலிங்கம் எனப்படுவது ஆதி மூல அணுவின் வடிவமே . இந்த மனிதன் சிவலிங்க வடிவுதான் என்பதற்கு என்ன ஆதாரம் ? இதைப்பற்றி திருமூலர் என்ன சொல்கிறார் என்று பாப்போம்.

மேலும் பார்க்க :சிவா பெருமான் தோன்றிய வரலாறு

“மானிடராக்கை வடிவு சிவலிங்கம்

மானிடராக்கை வடிவு சிதம்பரம்

மானிடராக்கை வடிவு சதாசிவம்

மானிடராக்கை வடிவு திருகூத்தே “

– திருமந்திரம் 17.26

மேற்கண்ட பாடல் மூலம்

மனித உடம்பு சிவலிங்கம்

மனித உடம்பு வெட்டவெளி

மனித உடம்பு காற்று

மனித உடம்பு திருகூத்து

வெட்டவெளியிலே இருந்து தோன்றிய மூல அணுவான சிவலிங்கம் உடம்பெடுத்து சுவாசக் காற்றால் ஆடி , ஓடி மடிகின்றான்.

அதுதான் கூத்து என்று சுருங்கச் சொல்கிறார். ஆகவே மனித உடல்தான் சிவலிங்கம். சிவலிங்கம் தான் மனித உடல் என்பது தெளிவாகப் புரிகின்றது.

அறிவியலும் சித்தநெறியும் –

————————————————

அறிவியலும் சித்தநெறியும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.

ஆண்குறி – கொடிமரம்.

பெண்குறி – பலிபீடம்.

தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பீனல்சுரப்பி. பீனலின் சுரப்பி முதன்மையான சுரப்பி. பீனல்சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பீனல்சுரப்பி( pineal gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப்போவதை உங்களால் காண முடியும்.

Leave a Reply