சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமி வரலாறு

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமி வரலாறு                                                                                                                                                                                                                                                    சத்ரு சம்ஹார ஹோமம் என்பது, நாம் பக்தியுடன் போற்றும் முருகப் பெருமான் என்னும் சுப்பிரமணியர் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். தெய்வ தம்பதிகளான சிவபெருமான்-பார்வதி தேவியின் மகனாக அவதரித்த சுப்பிரமணியரை, பெரும் சக்தி வாய்ந்த தெய்வமாக, பண்டைய ரிக் வேதம் போற்றுகிறது. தூய அன்பின் அடையாளமாகவும் திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர்.

சத்ரு சம்ஹார ஹோமம், எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் வழிபாடாகும். இதன் மூலம் வெளிப்படும் பெரும் ஆற்றல் நம்மை பாதுக்காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக விளங்குகின்றது.

சத்ரு சம்ஹார ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

சத்ரு சம்ஹார ஹோமத்தின் மூலம், பகவான் சுப்பிரமணியரின் அருளை நாம் பெறலாம். இதன் மூலம் தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும்.

பாரம்பரிய முறை ஹோமம்

சத்ரு சம்ஹார ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உங்கள் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் எந்த இடத்திலும் இந்த ஹோமத்தை செய்யலாம். இதில் பங்கு கொள்வதன் மூலம், உங்களை பாதிக்கும் அனைத்து தீய சக்திகளிடமிருந்தும், உங்களுக்கு, தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க ;சத்ரு சம்ஹார ஹோமம்   homam       சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும். முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும். murugan
நன்மை என்கிற ஒரு விடயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். உலகில் இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் மற்றொன்று எதிர்ப்பதமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு மனிதன், சக மனிதனின் மீது கொண்ட பொறாமை போட்டி எண்ணங்களால் அவனுக்கு எதிரியாக மாறி, அந்த மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதை போன்று வேறு எந்த ஒரு உயிரினமும் செயல்படுவதில்லை. என்ன தான் நாம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் செயல்பட்டாலும் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரியாக கருதுபவர்கள் பலர் இருப்பதை நம்மால் அறிய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.                                                                                              சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.

Leave a Reply