கார்த்திகை தீபத்தின் நன்மைகள்

கார்த்திகை தீபத்தின் நன்மைகள்                                                                                                                            கார்த்திகை தீபம் தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும் சத்குரு இங்கு விளக்குகிறார்.                                                                                                                                                                                                                 கார்த்திகை தீபம் எதற்காக?

தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல.

இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்!

உத்தராயணம், தக்ஷிணாயனம்

ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ‘கைவல்ய பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த ‘சாதனா’விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் உங்கள் சாதனாவின் பலன்களை உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதை பல கதைகளில் கேட்டிருப்பீர்கள்.

 மேலும் பார்க்க ;கார்த்திகை தீபம் மகத்துவம் மற்றும் பயன்கள்                                                                                                                                      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து கார்த்திகை தீபத்திருநாள் கொண்டபப்படுகிறது.மழைக்காலங்களில் வரும் தோற்று கிருமிகளை அன்றைக்கே களைந்து குழந்தைகள் பெரியோர்களை காக்கும் ஒரு நுட்பம்  இந்த தீபத்திருநாள் .காற்றில் உள்ள நுண்ணிய கிருமிகளை சொக்கப்பனை அல்லது மாவொளி  நெருப்பு பொறிகள்  அழிப்புது உண்மை.இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் இதை ஈராயிரம் ஆண்டுகளுக்காக கடைபிடிக்கிறாரகள்.                                                                                                                                              

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.. அக்னி ஸ்வரூபமாக போற்றப்படும் சிவனுக்கும்சிவ அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம்.பொதுவாக கார்த்திகை மாதத்தில் இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது.கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’  போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம்

 

திருக்கார்த்திகை என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது விளக்கும், திருவண்ணாமலை தீபமும் தான். முக்தி தரும் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது திருவண்ணாமலை. மலையை வணங்கினாலே சிவனை வணங்கிய பலனை பெற்று விடலாம் எனும் அளவிற்கு சிறப்பு வாய்ந்த அண்ணாமலை, சிவ பெருமான் நித்ய வாசம் செய்யும் கைலாய மலைக்கு இணையானதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக மாறி மாறி, கலியுகத்தில் கல் மலையாக காட்சி தருகிறது அண்ணாமலை.அண்ணுதல் என்றால் எளிதில் அணுகக் கூடிய என்று பொருள். அண்ணா என்றால் எளிதியில் அணுக முடியாதது. தீய எண்ணம் உடையவர்கள், தான் என்ற அகந்தை உடையவர்களால் எளிதில் அணுக முடியாததாக இருப்பதால் இந்த மலை அண்ணாமலை என அழைக்கப்படுகிறது. அதே சமயம் தன்னை சரணாகதி அடையும் பக்தர்களுக்கு மிக எளிமையான வந்து அருளக் கூடிய தெய்வமாக அண்ணாமலையார் விளங்குகிறார்.

vilakku-f

கார்த்திகை மிருகசிருஷ மாதத்தின் 11 வது நாளில், சுக்லபட்ச ஏகாதசி நாளில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் கீதா ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். பகவத் கீதை உபதேசிக்கப்பட்டு 5159 ஆண்டுகள் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. 2022 ம் ஆண்டில் கீதா ஜெயந்தி, டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 03 ம் தேதியன்று காலை 5.39 மணி துவங்கி, டிசம்பர் 04 ம் தேதி காலை 5.34 வரை ஏகாதசி திதி உள்ளது.

 

Leave a Reply