பூர்வ புண்ணிய ஸ்தானம் :
ஜோதிட சாஸ்திரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிப்பிடும் பாவகம் ஐந்தாம் பாவகம் ஆகும்.பதிவு நீளமாகத்தான் இருக்கும்.சுருங்கச்சொல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே.பொறுமையாக இறுதிவரை பதிவை வாசியுங்கள் .
பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன?
- சுய ஜாதகத்தில் பூர்விகம் பாதிப்படைந்து இருந்தால் , ஜாதகர் அந்த வீட்டுக்குண்டான தன்மையை விருத்தி செய்துகொள்ள நிச்சயம் வாய்ப்பு உண்டு.
- ஆனால் கெட்டு விட்டது என்றால் ஜாதகரால் ஒன்றும் செய்ய இயலாது இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 கிலோமிட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது சகல முன்னேற்றத்தையும் தரும், வேறு வழியே கிடையாது .இந்த ஜாதகர் இதை தவிர்ப்பாரே ஆயின் நிச்சயம் ஜாதரால் கஷ்டங்களை தாக்கு பிடிக்க முடியாது, தனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகி விடும்
பூர்விகம் கெடுவதற்கு முக்கிய காரணங்கள் :
ஜாதகரின் முன்னோர்கள் தம்மை நாடிவந்தவர்களை நிந்தனை செய்வதாலும், பெண்களை போக பொருளாக நடத்தியதாலும் , தனது மனைவியை கொடுமை செய்து மனம் நோக செய்ததாலும் , பசுவை கொன்றதாலும் , இளம் பெண்ணை மான பங்கம் செய்ததாலும் .மற்றவர் சொத்தை அகபரித்து கொண்டு அவர்களை மனம் நோக செய்ததாலும் , மற்றவர் மரணத்திற்கு நேரடியாக மறைமுகமாக காரணமாக இருந்தாலும் , சிவனடியார்களுக்கு அண்ணம் இடாத காரணத்தாலும், தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , தனது குழந்தையை தானே கொன்றதாலும் , தனது பெற்றோர்களை வயதான காலத்தில் பேணி பாதுகாக்கும் கடமையை செய்யாத காரணத்தினாலும். கோவில் சொத்தை அகபரித்து கொண்ட காரணத்தினாலும் நிச்சயம் பூர்விகம் 100 சதவிகதம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள்…
ஐந்தாம் அதிபதி1-ல் நின்றால்…குலதெய்வ கோயிலுக்கு மலர்மாலைகள் வாங்கிதரவும்…
ஐந்தாம் அதிபதி-2ல்…
குலதெய்வக்கோயிலில் அன்னதானத்துக்கு இயன்ற உதவி செய்யவும்..
..
ஐந்தாம் அதிபதி3-ல்
குலதெய்வக்கோயிலுக்கு மணிவாங்கி தரவும்..
ஐந்தாம் அதிபதி4-ல …
குலதெய்வத்துக்கு பசும்பால் அபிசேகம் செய்யவும் வசதியிருப்பவர்கள் கோதானம் செய்யவும்..
ஐந்தாம் அதிபதி5-ல்
குலதெய்வக்கோயிலில் அல்லது சிவன் கோயிலில் ஆலமரம் அரசமரம் நட்டு பராமரிக்கவும்..
ஐந்தாம் அதிபதி 6 -ல்…
குலதெய்வத்தை ஆத்மார்த்தமாக சரண்டைந்து வழிபடவேண்டும்..
ஐந்தாம் அதிபதி7-ல்…
குலதெய்வ கோவிலில் வில்வமரம் தென்னங்கன்று நட்டு வைக்கவும்.
ஐந்தாம் அதிபதி 8 -ல் குலதெய்வம் / இஷ்ட தெய்வத்துக்கு சந்தனக்காப்பு வைத்து வழிபடவும்
ஐந்தாம் அதிபதி-9 ல்..
பெளர்ணமிதிதியில் குலதெய்வத்தை வழிபடவும்
ஐந்தாம் அதிபதி10-ல்..
குலதெய்வத்துக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்
ஐந்தாம் அதிபதி11-ல்..
வெள்ளிக்கிழமை குலதெய்வத்துக்கு சக்கரை பொங்கல் படைத்து வழிபடவும்..
ஐந்தாம் அதிபதி12-ல்..
குலதெய்வ வழிபாட்டில் தீவிரம் காட்ட வேண்டும்…
என்றும் அன்புடன்
S.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்