சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

சித்தர்களை பற்றிய அறிவு என்று ஒரு மனிதனின் எண்ணத்திற்கு வருகிறதோ அன்று முதல் அவனது மனித அறிவின் செயல் திறன் பல கோடி மடங்கு செயல் பட தொடங்கும்.

சித்தர்கள் ரகசியம்

“இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள்.. கொல்லிமலை மர்மங்கள்!!….

இந்தியாவில் மலைகள் எண்ணில் அடங்காத வகையில் உள்ளது. இதில் சிலவற்றை மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள் மற்றும் சிலவற்றை சுற்றுலாவாக பயன்ப்படுத்துகிறார்கள்.

அப்படிபட்ட மலைகளில் மருத்துவம், விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்த சித்தர்களும் வாழ்ந்து வருவதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.

அவ்வாறு கொல்லிமலையில் வாழும் சித்தர்களை பற்றி பல கதைகள் உலா வந்துக்கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் அங்கு வாழும் சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் வித்தை அறிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது இன்னும் நிறைய மர்மங்களை கொண்டுள்ளது இந்த கொல்லிமலை. அவ்வற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க :அறிமுகமும் நமது அடுத்த வாழ்வியலும்

மர்மங்கள் நிறைந்த மலைகள்

தமிழகத்தில் மர்மங்கள் நிறைந்த மலைகளாக பார்க்கப்படுபவை கொல்லிமலை, பர்வதமலை, சதுரகிரிமலை ஆகியன. இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்து வருவதாக இன்றும் நம்பிக்கை நிலவுகிறது.இந்த மலைகளில் ஆன்மீகம் தவிர பல அமானுஷ்யங்களும் புதைந்து கிடக்கின்றன.

கொல்லி மலை

மேற்கூறிய மலைகளில் மிகவும் அச்சுறுத்தலான மலை என்றால் அது கொல்லிமலைதான ஏனெனில் . இதன் உயரம் அப்படி.நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கொல்லி மலை. இது ஏறக்குறைய 1300 மீ உயரம் கொண்டது.

கொல்லிமலை வரலாறு

இந்த பகுதியை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்பவர் ஆட்சி செய்துள்ளார். பிற்காலத்தில் பல அரசுகள் இங்கு அமைந்தன.

இங்கு அமைந்துள்ள மனித உருவில் அவதரித்த தெய்வமான கொல்லிப் பாவை கோயில்தான் இந்த மலைக்கு கொல்லி மலை என்று பெயர் வர காரணம் என்று கூறுகின்றனர்.

சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் இங்குள்ள மலைத் தமிழர்களின் தெய்வமாக இருந்துவருகிறார்.

கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்பது சிலை அல்லது சிற்பம் அல்ல.. அது கையால் வரையப்பட்ட ஓவியம். அந்த ஓவியத்தை கடவுளாக வழிபடுகின்றனர் மக்கள்.அந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த அம்மனை எட்டுக்கை அம்மன், எட்டுக்கை காளி என்றே அழைக்கின்றனர்.

மேலும் படிக்க :அறிவினை சார்ந்த உணர்வுகளும் உண்மைகளும்

சித்தர்கள் செய்யும் மர்மங்கள்

இந்த மலையில் நிறைய சித்தர்கள் வாழ்வதாகவும், பவுர்ணமி காலங்களில் அவர்கள் பல கண்களுக்கு தெரிவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மலைக்கு வருகை தரும் பலர், நூறு ஆண்டுகள் வாழ மூலிகைகளையும், இரும்பை தங்கமாக்கும் ரகசியமறிந்த சித்தர்களையும் தேடி வருகிறார்கள்.

மனிதனின் அறிவு

அறிவு மேலோங்கிய நிலையில் ஒரு மனிதனின் உணர்ச்சி எந்த அளவில் இருக்கும்?

மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் உணர்ச்சியாகவும், புத்தி மூலமாக ஏற்படும் பதிவுகள் அறிவாகவும் உருவெடுக்கின்றன.

ஒரு மனிதன் சூத்திர வர்ணத்தில் இருக்கும்பொழுது அறிவு மிகமிகக் குறைவாகவும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படுகிறது. உணர்ச்சி பெட்டகமும், அறிவு பெட்டகமும் ஒன்றுகொன்று தொடர்பின்றி, இடையே உள்ள தடுப்புச் சுவர் கனமாக மாறிவிடுகிறது.

ஆனால் மனிதன் தன் வர்ணப்பிரிவில் உயர்ந்து வரும்பொழுது, அவனது உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் உள்ள தடுப்புச் சுவர் மெலிந்து மெலிந்து முடிவில் முழுவதுமாய் கரைந்து போகிறது. இதன் விளைவாக அவனது உணரச்சிகள் அறிவோடு இரண்டற கலந்து விடுகிறது. அறிவோடு கலந்து விட்ட மனதில் உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.

உணர்ச்சிகள் மனதின் அடித்தளத்திலிருந்து அறிவுக்கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் வெளிவரும். எனவே அவை நல்ல உணர்ச்சிகளாகவும் இருக்கலாம்; கெட்ட உணர்ச்சிகளாகவும் இருக்கலாம். ஆனால் மனம் (உணர்ச்சி) புத்தியோடு (அறிவு) இரண்டறக் கலந்தபின், அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. அவனிடமிருந்து உணர்வுகள் மட்டுமே வெளிப்படும்.

மேலும் படிக்க :அறிவின் வகைகள் மற்றும் எண்ண புரிதல்கள்

அறிவுக்கு அடங்காத மனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; அறிவோடு கலந்த மனமோ உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தும்.

உணர்ச்சிகளை விட உணர்வுகள் வெளிப்படுவதே நல்லது; ஏனெனில் உணர்வுகளில் கெட்ட உணர்வு என்று எதுவும் கிடையாது.

சித்தர்களுக்கும் மனிதர்களுக்கும் மிக பெரிய இடைவெளி இருந்த காலங்கள் கடந்து வந்து கொண்டு உள்ளன.தற்பொழுது சித்தர்களின் வழிப்பாதையை இளம் வயதிற்கு உட்பட்ட நபர்கள் கூட தெரிந்து கொண்டு அவர்களின் தன்மையில் ஒரு துளி அளவில் எடுத்தாவது பயன் படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

சித்தர்களின் வழி அறிவோம் தெளிவோம்

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply