பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்

பௌர்ணமி நாட்களில் நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நல்ல பலன்களை நமக்கு வழங்கும்.இந்த பதிவினை முழுவதுமாக படிக்கவும்.நாம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் அடங்கிய பதிவு.

பௌர்ணமி திதியும் பலனளிக்கும் பரிகாரமும்

நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார்.

இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர்.

கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர்.

பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி.

மகம் நட்சத்திரம் எல்லா மாதத்திலும் வந்தாலும்
மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இப்படி கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பூரண சந்திரன் அமையும் நாளே மாசி மாத பவுர்ணமி.

மேலும் படிக்க : சித்தர்கள் ரகசியமும் மனிதனின் அறிவும்

பௌர்ணமி திதி

சூரிய மற்றும் சந்திர சக்திகள் நேர் எதிரே இரண்டு ஒளிரும் கிரகம் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வது பௌர்ணமியாக பிரகாசமடைகிறது.

அதன் பிரகாச சக்தியை நினைத்து பார்த்தலே மெய் சிலிர்க்கும்

அன்றைய தினம் நிலவு முழுமதியாக திகழும். அனைவருக்கும் தெரியும்

ராசிச் சக்கரத்தில்
சூரியனில் இருந்து
7-வது ராசியில் இருக்கும்.

அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.

வானியல் ரீதியாக
சில நட்சத்திரங்கள் சந்திரனோடு சேர்ந்து
சில கதிர் வீச்சுகளை பூமியை நோக்கி வீசுகின்றன.

பௌர்ணமி தினத்தன்று அந்த கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும்.

பௌர்ணமி நாள் என்றால் முழுநிலவு நாள்.

பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது,

இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

மேலும் படிக்க : பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்

அர்த்த பூர்ணிமம்

என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும்

பூர்வ பூர்ணிமம்

என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும்

உத்தர பூர்ணிமம்

என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும்

பாச பூர்ணிமம்

என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்

பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம்.

மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க : ராசியை போல கரணமும் முக்கியம்

பௌர்ணமி நாளுக்கு என்னதான் மகத்துவம்?

பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். காரணம், அந்நாளில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும்.

நீங்கள் காணும் எந்த ஒரு பொருளும், அழகாய் இருந்தால் அதன்பால் உங்கள் கவனம் சற்றே அதிகமாகும் அல்லவா?

இதுவே அசிங்கமாய் இருக்கும் ஒரு பொருளின் மீது நீங்கள் ஈர்க்கப்படுவது கிடையாது என்பதை கவனித்திருக்கிறீர்களா?

நிலவிற்கு நம்மைச் சுண்டியிழுக்கும் குணமிருக்கும்.

அதே சமயத்தில்,அதனால் நம் உள்வாங்கும் தன்மையையும் அதிகரிக்க முடியும்.

மற்றொரு விஷயம், இந்தப் பூமி, நிலவின் நிலையோடு ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும்.

நிலவின் வேறு எந்த நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போதும், முழுநிலவாய் அது இருக்கும் தருணத்தில் அது வெளிப்படுத்தும் அதிர்வும், சக்தியும் மிக வித்தியாசமாய் இருக்கிறது.

அதன் காந்த ஈர்ப்பு சக்தியும் மிக வித்தியாசமாய் உள்ளது.

நிலவு, பூமியின் மேல்மட்ட பகுதிகள் நிலவிற்கு திறந்தநிலையில் இருப்பதால், நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் மேல் பகுதிகளின் மேல் தீவிர தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

இயற்கையிலேயே இது போன்ற ‘இழுக்கும்’ சக்தி வேலை செய்யும்போது, உங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், உங்களுக்குள் இருக்கும் சக்தி, இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும்.

உங்கள் ரத்தஓட்டமும் சரி, பிராண சக்தியும் சரி, வெளிஅதிர்வுகள் மாறியிருப்பதால், எப்போதும் போலன்றி வேறுவகையில் ஓடத் துவங்கும்.

எப்படி நீர்மட்டத்தில் வழக்கத்தை விட பௌர்ணமி அன்று நிலவின் தாக்கம் அதிகமாய் இருக்கிறதோ, அதனால் கடலின் அலைகள் அதிகமாக மேலெழும்புகிறதோ,
அதே போல் உங்கள் ரத்தமும் மேல் இழுக்கப்பட்டு,மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

இந்த மேலெழும்புதல் நடைபெறும்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது மேம்படும்.

சிறிது புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பௌர்ணமி அன்று இன்னும் அதிக தடுமாற்றத்துடன் இருப்பார்கள்
என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே?

மேலும் படிக்க : அறிவினை சார்ந்த உணர்வுகளும் உண்மைகளும்

அன்றைய தினம் ஏற்படும் சக்தி ஓட்ட அதிகரிப்பால், உங்கள் குணம் எதுவோ அது மேம்படுகிறது.

நீங்கள் சமநிலை இல்லாமல் இருந்தால், அன்று சமநிலையின்மை அதிகரிக்கும்.

உங்களுக்குள் உள்ள பிற பண்புகளும்கூட இதனால் மேன்மையடையும்.

ஆனால், அதனை உணரும் நுண்ணுணர்வு பலரிடம் இருப்பதில்லை.

நதியான நிலையில் இருந்தால், அன்று உங்கள் தியானநிலை ஆழமாகிறது.

அன்பு நிறைந்தவர் என்றால், அன்று அன்பு பெருக்கெடுக்கும்.

பயம் நிறைந்தவராய் இருந்தால், உங்கள் பயவுணர்வு இன்னும் அதிகரிக்கும்.

உங்கள் குணம் எதுவோ, அதனை அந்நாள் மேம்படுத்தும்.

ஆகவே ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக தியானம் செய்பவர்களுக்கு, பௌர்ணமி இரவு மிக உகந்ததாய் இருக்கும்.

ஏனென்றால் பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும்.

அப்படி சக்திநிலை உயரும் போது, விழிப்புணர்வு ஆழமாகிறது.

சக்திநிலை மேம்படாமல், விழிப்புணர்வைப் பற்றி நாம் பேசவே இயலாது.

அதனால், இந்த இரவில் தோற்றத்துவத்தில் ஏற்படும் இந்தப் பிரம்மாண்ட மாற்றத்தை, நாம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இலவசமாய் கிடைக்கும் சவாரிபோல், இந்நாள் உங்களுக்கு அளப்பரிய சக்தியையும் விழிப்புணர்வையும் வழங்கும்.

மேலும் படிக்க : ஆன்மீகத்தின் உணர்வும் அறிவியலின் உணர்வும்

பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம்.

கோயில் சிற்ப வேலைப்பாடுகள்,
மங்கள காரியங்களில் ஈடுபடலாம்.

தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் நலம் தரும்.

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.

இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கு பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும்.

வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும்.

பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே!

பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.

சில விஷயங்கள்
மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன.

ஆன்மீகமோ? அறிவியலோ?
இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில்
கிரிவலம் வருவது,
விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது.

பெளர்ணமி பிறந்தவர்கள் நல்ல குணாளன், புத்திசாலி, பொறுமையானவன்,

வார்த்தை தவறாத சத்யவான், நேர்மையானவன்

தயாள சிந்தனை உடையோன்.

இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும்,
உக்கிர தெய்வத்தை பூசைசெய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள்

இத்திதியின் அதி தேவதை வருணன்

பெளர்ணமி திதியில பிறந்தவர்கள்,இந்த திதியின் தேவதையான வருணனையும்
பெளர்ணமி திதி கிரக ஸ்தலங்களையும்
வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி பீடை,கஷ்டம் ஆகியவைகளை நீக்கும்.

பெளர்ணமி யோகம்!

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்ரா பெளர்ணமி.

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வரும் வைகாசி விசாகம்.

ஆனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வரும் ஆடிபூரம் பெளர்ணமி

ஆவணிஅவிட்டம்
{திருவோணம்} நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி

புரட்டாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி

ஐப்பசி மாதம் ரோகிணியில் வரும் பெளர்ணமி

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி

மார்கழி மாதம் திருவாதிரையில் வரும் பெளர்ணமி

தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் தைப்பூச பெளர்ணமி

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் வரும்
மாசிமகம் பெளர்ணமி

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் வரும் பங்குனி உத்திரம் பெளர்ணமி

இப்படி சூரியனும்-சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் காலகட்டத்தில் மேற்படி நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் மகாபாக்கியசாலிகளாகவும்,
மிக்க யோகமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் பிறப்பு நிகழ்ந்தால் புகழ்மிக்க வாழ்க்கையும் ராஜ வாழ்வும் கிட்டும்.

சூரியனும் சந்திரனும் 7க்கு 7-ல் சப்தமாதிபதியாய்
இருக்க, அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்து விடும் அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார்.

பௌர்ணமி திதி தேவதை

பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் பௌர்ணமி திதி நித்யா தேவதையை முறையாக வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும்.

நித்யா தேவதை படத்தை வைத்து அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ முடியும்.

திதி நித்யா தேவதையின் பெயர் சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியவள்.

பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள்.

பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி என்றும் நிலையானவள்.

கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

பௌர்ணமி திதியில் வழிபட வேண்டிய திதி நித்யா தேவதையின் மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி.

 

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply