மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.

உச்சிஷ்ட கணபதி பற்றிய அபூர்வ தகவல்கள்

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு.

வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்தவர்’ என்பர்.

இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. உச்சிஷ்டம் என்றால் ‘எச்சில் படுத்துதல்’ என்று பொருள்.

யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் ||

இங்கே ‘ உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருள்படவே பேசப்படுகிறது.சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் மனிதன் கடக்க வேண்டும்.

மேலும் படிக்க : ஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்

பிராமணி அம்மாள் பகவான் ராமகிருஷ்ணருக்கு இதைத்தான் அடிக்கடி கூறுவார். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு (எதுவாயினும்) இவற்றை புறக்கணிப்பது இல்லை.

இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்களே தந்திர சாதனத்திற்கு தகுதியுள்ளவர்கள்.

இவர் தனது சக்தி தேவியான வல்லபையின் குஹ்யத்தில் தனது தும்பிக்கையை வைத்துள்ள நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதன் மூலம், எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே, எதுவும் நிசித்தமில்லை என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்தில் ‘யோனி பூஜை’ என்றொரு சம்பிரதாயம் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கு தெரிய வேண்டியது கிரியா சக்தியை தனது இச்சா சக்தியால் இவர் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது.

விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்து காட்சியளிக்கிறார்.

இதற்கு உரிய விளக்கமாக ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள்.

விநாயகர்,பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது.

(சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் ,மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி உட்பிரகாரத்தி்ல் கன்னிமூலையிலும் இத்தகைய அமைப்பில் விநாயகர் சிலைகள் இருக்கிறது).

மேலும் படிக்க : சந்திராஷ்டமம் பயம் தவிர்த்து ஜெயம் பெற

வழிபாடு:

உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும்.

ஆனால்,
கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.

உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். குறிப்பாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், படுக்கையில் இருந்தபடியேகூட ஜபிக்கலாம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக நமக்கு வெற்றி கிடைக்கும்.

தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். பரீட்சித்து பாருங்கள்.இதில் ஐயமில்லை.

மேலும் படிக்க : செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்

தியானம்:

நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

மூல மந்திரம்:

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா

( ஒரு லட்சம் தடவை ஜபிக்கவும் )

மேலும் படிக்க : கால சர்ப்ப தோஷமா? யோகமா?

குறிப்பு :

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!

“உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!

தம்பதிகள் சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து மிக மிக அன்னியோன்யமாக வாழ உதவுகிறது உச்சிஷ்ட கணபதி உபாசனை.

உச்சிஷ்ட விநாயகரை வழிபட்டால், கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேற்றுமை நீங்கி பரஸ்பர வசியம் ஏற்பட்டு தம்பதி ஒற்றுமை பலப்படும்.

தாம்பத்திய உறவு மேம்படும்.குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம்.

கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது. விநாயகருக்கு (விநாயக சதுர்த்தி தவிர்த்து மற்ற நாட்களில்)
துளசி அணிவிக்கக்கூடாது.

உச்சிஷ்ட கணபதிக்கான தனிக்கோயில்கள்:

1,.திருவாரூர் கோவில் மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மூர்த்தம்.

2.நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி-வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் மணிமூர்த்தீஸ்வரம் என்ற இடத்தில் ராஜகோபுரத்துடன் கூடிய உச்சிஷ்ட கணபதியின் தனி கோயில் அமைந்துள்ளது.

தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தபடி காட்சி தருகிறார்.

தன்னுடைய 32 தோற்றங்களில் 8–வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும்.

8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

இந்தக் கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

கோவில் தல வரலாறு:

முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், ‘என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக்கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக்கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்த சமயம் அவன், தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்’ என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான்.

பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.

மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மனதில் நினைத்து மிகப்பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக்கொண்டு யாகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.

மும்மூர்த்திகளும் இந்திரனிடம், வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் கோபத்துடன் போரிட வந்தான். அவன் கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி, தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமர செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம், அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தியபடி இருந்தார்.

அப்போது விநாயகர் ஒரு கோடி சூரியனுடன் இணைந்து வந்தது போல் ஒளிப் பிரகாசமாக காட்சியளித்தார்.

விநாயகரை பார்த்த வித்யாகரன், அவருடைய ஒளிக்கதிர் வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்து போனான். அவன் வாங்கிய வரத்தின்படியே அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல், தேவியுடன் இருக்கும்போது போரிடாமல் விநாயகருடைய பார்வையினாலேயே அவனை வதம் செய்தார்.

வித்யாகரன் இறந்ததும் அனைவரும் மகிழ்ந்து விநாயகரை வணங்கினார்கள். முனிவர்கள், விநாயகரிடம் பராசக்தியின் அவதாரமான நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன், பூமியில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்கள்.

விநாயகரும் அதற்கு இசைந்து, சூரிய பகவானின் தேரில் ஏறி தாமிரபரணி நதிக்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் முனிவர்களுக்கு காட்சியளித்து அருளினார்.

சூரிய பகவான், விநாயகரை வணங்கி, ‘நான் ஒவ்வொரு சித்திரை மாதமும் முதல் நாள் அன்று தங்கள் மேல் எனது ஒளியை விழச்செய்து வணங்கி ஆசி பெறுவேன். அன்றைய தினம் தங்களை உள்ளன்போடு வழிபடுகின்றவர்களுக்கு, சகல செல்வங்களையும் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். உச்சிஷ்ட கணபதியும் அவ்வாறே அருளினார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.

உச்சிஷ்ட கணபதி மூலவராக, மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிக் கிறார். அவர் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச்சுவருடன் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தத் திருக்கோவில். கோபுரத்தின் முன்புறமும், பின்புறமும் 16 வகையான விநாயகர் உருவங்கள், அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன்–மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்–மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

16 விநாயகர்கள்

தேவியை மடியில் அமர்த்தி, தன் துதிக்கையை தேவியின் மீது வைத்திருக்கின்ற கோலம், பல கோவில்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆனால் அந்த உருவம் மூலவராக இருக்கின்ற இடம் இந்த ஆலயம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் உள்பிரகாரத்தில் மூலவரை சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சுவர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீரகணபதி, சங்கடஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்புரிகின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

தேவியை மடியிலே வைத்து அருள் பாலிக்கின்ற வடிவம் உள்ள விநாயகர் திருஉருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி, புத்தி கணபதி ஆகிய 5 விநாயகர் பெருமான் திருஉருவ சிலைகள் உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

இவரை நன்கு வணங்கி , மந்திர உபதேசம் பெற்று வேண்டிய வரம் பெற்று வாழவும்.

மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:

ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.

இதுமறைக்கபட்டது ,
வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.

இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.

இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம்.

இதனுடய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

காரிய தடை விலக

காரிய சித்தி

இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்

பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர

மூலாதாரம் சரிவர இயங்க

அனைத்து ஐஸ்வரியமும்,
சுபிட்சமும் உண்டாக

மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும்

“ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா”

(உரு 16000)

அனைவருக்கும் தெரிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்.

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய,
லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.

மேலும் பல கட்டுரையில் தொடருவோம்,

நற்பவி நற்பவி நற்பவி

என்றும் ஆன்மீக தேடலுடன் இறைபணியில்

நன்றி
ச.சுதாகரன்
பொன்னி அம்மன் ஜோதிட நிலையம்

Leave a Reply